ஹோம் /நியூஸ் /சென்னை /

பள்ளி வாகன ஓட்டையில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவியின் வழக்கு.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

பள்ளி வாகன ஓட்டையில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவியின் வழக்கு.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

மாணவி பயணித்த பேருந்து

மாணவி பயணித்த பேருந்து

இதனை அறியாமல் பஸ்ஸை ஓட்டி சென்ற டிரைவரை அங்கிருந்த பொதுமக்கள் விரட்டி பிடித்து டிரைவரை தாக்கி ஆத்திரத்தில் பஸ்ஸிற்கு தீ வைத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி வாகன ஓட்டையில் தவறி விழுந்து மாணவி உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி வாகன ஓட்டையில் தவறி விழுந்து மாணவி உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை முடிச்சூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேதுமாதவன் என்பவரது மகள் சுருதி, கடந்த 2012ஆம் ஆண்டு சீயோன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஜூலை 25ஆம் தேதியன்று வழக்கம் போல் பள்ளியின் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சீட் அடியில் இருந்த ஓட்டையில் தவறி விழுந்தார். பேருந்தின் பின் சக்கரம் ஏறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை அறியாமல் பஸ்ஸை ஓட்டி சென்ற டிரைவரை அங்கிருந்த பொதுமக்கள் விரட்டி பிடித்து டிரைவரை தாக்கி ஆத்திரத்தில் பஸ்ஸிற்கு தீ வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் பள்ளி தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில் கைது செய்யப்பட்ட 8 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

First published:

Tags: Bus accident, Chennai, Student