ஹோம் /நியூஸ் /சென்னை /

மொபைல் பவுச் வாங்குவது போல் நடித்து நூதன முறையில் கொள்ளை.. சிசிடிவியில் சிக்கிய நபர்கள்

மொபைல் பவுச் வாங்குவது போல் நடித்து நூதன முறையில் கொள்ளை.. சிசிடிவியில் சிக்கிய நபர்கள்

மொபைல் பவுச் வாங்குவது போல் நடித்து நூதன முறையில் கொள்ளை

மொபைல் பவுச் வாங்குவது போல் நடித்து நூதன முறையில் கொள்ளை

சென்னை அரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் செல்போன் கடையில் பவுச் வாங்குவது போல் நடித்து பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Chennai

  சென்னை அருகம்பாக்கம் பகுதியில் அஜ்மீர் அலி(41) என்பவர் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று மாலை 2 மர்மநபர்கள் மொபைல் பவுச் வாங்க வந்துள்ளனர். அப்போது கடையில் அஜ்மீர் அலியின் மனைவி இருந்துள்ளார். மர்ம நபர்கள் இருவரும் மொபைல் பவுச் வேண்டும் எனக்கூறி அஜ்மீர் அலியின் மனைவியின் கவனத்தை திசை திருப்பியுள்ளனர்.  அவரும் இவர்களின் பேச்சை நம்பி கடையினுள் சென்று மொபைல் பவுச் எடுப்பதற்காக சென்றுள்ளார்.

  இந்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் இருவரும் கடையில் இருந்த ரூ.1.5 லட்சம், விலை உயர்ந்த செல்போன் ஒன்று, 5 கிரெடிட் கார்டு, 2 டெபிட் கார்டு அடங்கிய கைப்பையையும் திருடி சென்றுள்ளனர். நொடிபொழுதில் கடையிலிருந்து இருவரும் தப்பி சென்றுள்ளனர்.

  Also Read : ஓசியில் நான் வரமாட்டேன்.. இந்தா காசு, டிக்கெட்ட கொடு – பேருந்தில் சண்டையிட்ட மூதாட்டி

  பவுச்சுடன் திரும்பி வந்த அஜ்மீர் அலியின் மனைவி, பணமும் செல்போனும் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இருவரும் கொள்ளையடித்து  சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அஜ்மீர் அளித்த புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: CCTV, Crime News, Theft