Home /News /chennai /

மதுரவாயலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 2 பேர் கைது

மதுரவாயலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 2 பேர் கைது

கைது செய்யப்பட்ட திருடர்கள்

கைது செய்யப்பட்ட திருடர்கள்

Chennai : சென்னை மதுரவாயலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பைக், வீட்டின் பூட்டை உடைக்க பயன்படுத்தபடும் இரும்பு ராடு, சுத்தியல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    சென்னை மதுரவாயில் பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர் கருணாநிதி பாண்டே. இவர் கடந்த ஜனவரி மாதம் அலுவலக வேலைக்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டினுள் சென்று பா்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டிருந்தன.

    இது குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.  மதுரவாயல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இன்று காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை மடக்கி விசாரணை செய்தனர்.

    அப்போது, அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் இரும்பு ராடு, சுத்தியல் இருப்பது தெரிய வந்தது. காவல்துறையினரின் தொடர் விசாரணையில் ஒருவர் ஜெயக்குமார் (வயது 19), மற்றொருவர் விக்னேஷ் என்கின்ற ஆகாஷ் (வயது 21) என்பது தெரியவந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இவர்கள் இருவரும் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், தொடர்ந்து மதுரவாயில் சுற்றுவட்டார பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    Must Read : போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் திடீர் நீரூற்று - வியப்பில் ஆழ்ந்த திருச்சி மக்கள்

    அதனைத் தொடர்ந்து, அவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மற்றும் வீட்டின் பூட்டை உடைக்க பயன்படுத்த கொண்டு வந்த இரும்பு ராடு, சுத்தியல் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர் - சோமசுந்தரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Arrested, Chennai, Crime News, Robbery, Theft

    அடுத்த செய்தி