ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் வீடுகளை குறிவைத்து கொள்ளை - துப்பாக்கி முனையில் 2 கொள்ளையர்கள் கைது

சென்னையில் வீடுகளை குறிவைத்து கொள்ளை - துப்பாக்கி முனையில் 2 கொள்ளையர்கள் கைது

2 கொள்ளையர்கள் கைது

2 கொள்ளையர்கள் கைது

Chennai | சென்னையில் கடைகள் மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்த பலே கில்லாடி கொள்ளையர்கள் 2 பேரை துப்பாக்கி முனையில் வைத்து போலீசார்  கைது செய்தனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளை குறிவைத்து இரவு நேரங்களில் கொள்ளையடிக்கப்பட்ட நபர்களை பற்றி வேளச்சேரி காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளது.

  இந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கைபற்றி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த போலீசார் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 21-வயதான சூர்யா என்ற குருவிசூர்யா, 20 வயதான வினோத்குமார் என்ற எலிவினோத் ஆகிய இருவரை தனிப்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.

  கைது செய்யப்பட்ட அந்த இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததில் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு இடங்களில் கொள்ளையடித்ததாகவும் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக சுற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

  இந்நிலையில் கைதான இருவரிடம் இருந்தும் 4 சவரன் தங்க நகைகள் மற்றும் ஏராளமான செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  Also see...சென்னை புறநகர்ப் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை..!

  செய்தியாளர்: ப.வினோத்கண்ணன், இசிஆர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Arrested, Chennai, Crime News, Robbery