ஹோம் /நியூஸ் /சென்னை /

மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்.. காதலால் குணமான நோய்..! மருத்துவமனையிலேயே நாளை இருவருக்கும் டும்.. டும்..!

மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்.. காதலால் குணமான நோய்..! மருத்துவமனையிலேயே நாளை இருவருக்கும் டும்.. டும்..!

காதல் ஜோடி

காதல் ஜோடி

200 ஆண்டு பழமையான அரசு கீழ்ப்பாக்கம் மன நல காப்பக்கம் முதல் முறையாக ஒரு காதல் திருமணத்துக்கு சாட்சியாக போகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

மனநல சிகிச்சைக்காக இரண்டு ஆண்டுகள் முன்பு காப்பக்கத்தை நாடிய சென்னையை சேர்ந்த 42 வயதான மகேந்திரன் மற்றும் வேலூரை சேர்ந்த36 வயதான தீபா இந்த காப்பகத்திலேயே சந்தித்து பழகி காதல் செய்து, தற்போது வாழ்க்கை துணையாக மாற போகிறார்கள்.

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட பதற்றத்தின் மூலம் மகேந்திரனுக்கு Bipolar Affective Disorder ஏற்பட்டது. தந்தை இறந்த சோகத்தை தாள முடியாத தீபாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக உள்நோயாளிகளாக இருந்த இருவரும் மருத்துவமனையிலேயே சந்தித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஒருவரையொருவர் அரவணைத்து பாசமுடன் வாழ்க்கையை துவங்கவுள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய மகேந்திரன், தீபாவை முதன்முறையாக பார்த்த போது எனது அம்மா மாதிரி இருந்தது என்றும், எனது அம்மா ஒரு ஆசிரியர் தான், பழகிய பிறகு தான் தெரியும் தீபாவும் ஒரு ஆசிரியர் என்று. இதனால் எனது வாழ்க்கையில் உள்ள அனைத்து உறவும் அவரின் உருவில் கிடைத்தது போல தோன்றுகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ALSO READ | சென்னையின் முக்கிய பகுதிகளில் அக்டோபர் 28ல் மின் தடை.... உங்க ஏரியாவும் இருக்கானு தெரிஞ்சிக்கோங்க...

தொடர்ந்து பேசிய தீபா, எனது வாழ்க்கையில் ஒரு திருமணம் நடைபெறும் என்றெல்லாம் நான் கனவில் கூட நினைக்கவில்லை, இது ஒரு அதிசயமாக தோன்றுகிறது என கூறினார்.

மேலும், பேசிய காப்பக இயக்குநர் பூர்ணசந்திரிகா, தீபாவளி சந்தோஷத்தை விட, வரப்போகும் இவர்களின் திருமணத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இவர்களது வாழ்க்கையை தொடங்குவதற்காக புதிதாக வீடு வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த வீட்டுக்கு தேவையான பொருட்களை காப்பக பணியாளர்கள், நண்பர்கள் வாங்கி கொடுத்துள்ளனர்.

இருவருமே காப்பகத்தில் தான் தற்போது பணியாற்றி வருகின்றனர். இதனால் இவர்கள் இருவருக்கும் நாளை சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன் தலைமையில் மருத்துவமனையிலேயே திருமணம் நடைபெறவுள்ளது.

சோகத்தால் இருளில் மூழ்கிய இவர்கள், புதிய வாழ்க்கையை தொடங்க புத்துணர்ச்சியோடு காத்து கொண்டிருக்கின்றனர். மனநல காப்பகம் என்பது நோயும் சோகமும் சூழ்ந்த இடம் அல்ல, வாழ்க்கையில் பலருக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய இடம் என்பதை இந்த திருமணம் உணர்த்துகிறது.

Published by:Anupriyam K
First published:

Tags: Chennai, Kilpauk