முகப்பு /செய்தி /சென்னை / ஓய்வுபெற்ற விஞ்ஞானி வீட்டில் திருட ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள்... சென்னை அருகே பரபரப்பு

ஓய்வுபெற்ற விஞ்ஞானி வீட்டில் திருட ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள்... சென்னை அருகே பரபரப்பு

ஹெல்மெட் அணிந்து திருட வந்த 2 பேர்

ஹெல்மெட் அணிந்து திருட வந்த 2 பேர்

Crime News : சென்னையில் ஹெல்மெட் அணிந்த திருடர்கள் வீட்டில் புகுந்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை அடுத்த தாழம்பூர் பகுதியில் ஓய்வுபெற்ற விஞ்ஞானி பாலகிருஷ்ணன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் வீட்டை சுற்றி 6 அடி உயரத்திற்கு மதில் சுவர் அமைத்துள்ளார். மேலும் அதற்குமேல் 3 அடி உயரத்திற்கு கம்பி வலையும் அமைத்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் குடும்பத்துடன் ஓஎம்ஆர் சாலையில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த 2 பீரோக்களின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் பாதுகாப்பிற்காக வீட்டின் வெளியே பொறுத்தியிறுந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் இந்த பகுதியை முன்னதாக நன்கு நோட்டமிட்டுள்ளனர்.

பின்னர் வீட்டினுள் புகுந்து வீட்டில் யாரேனும் உள்ளனரா என்றும் பார்த்துவிட்டு யாரும் இல்லை என்பதை முதலில் உறுதி செய்துவிட்டு சென்றனர். சிறிது நேரத்தில் வீட்டின் பின்புறம் உள்ள 6 அடி மதில் சுவர் மற்றும் 3 வலைக்கம்பி என சுமார் 9 அடி உயரத்தை தாண்டி ஏகிரி குதித்த 2 நபர்கள் கையில் இரும்பு ராடை கொண்டு சென்று முதலில் வீட்டின் மெயின் இரும்பு கேட்டை உடைத்துள்ளனர்.

மேலும் வீட்டில் கொள்ளையடிக்க வந்தவர்களை போலீசார் கண்டுபிடிக்காமல் இருக்க 2 நபர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்து கொண்டும், மற்றொருவர் முகத்தை மறைக்கும் வகையில் துணியால் கட்டிக்கொண்டும் திருட வந்ததுள்ளது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

மேலும் தங்களது முகம் சிசிடிவி கேமராவில் பதிவாகிவிட்டது என்பதை உணர்ந்த அவர்கள் சிசிடிவி கேமராவை திருப்பியுள்ளனர்.

சிசிடிவி கேமராவில் திருட வந்தவர்கள் பதிவான காட்சிகளுடன் ஓய்வு பெற்ற விஞ்ஞானி தாழம்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : வினோத் கண்ணன் - இசிஆர்

First published:

Tags: Chennai, Crime News, Local News