ஹோம் /நியூஸ் /சென்னை /

முகம் சிதைந்த நிலையில் சடலம் மீட்பு.. உயிருக்கு உயிரான தோழனே உயிரை பறித்தது அம்பலம்

முகம் சிதைந்த நிலையில் சடலம் மீட்பு.. உயிருக்கு உயிரான தோழனே உயிரை பறித்தது அம்பலம்

உயிரிழந்தவர்

உயிரிழந்தவர்

Chennai | உயிரிழந்த லட்சுமிகாந்தின் கையில் பிரதீப், சூர்யா என பச்சை குத்தப்பட்டிருந்ததை போலீசாருக்கு துப்பு துலங்கியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Tamil Nadu

  சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் மது அருந்தி கொண்டிருந்த போது தனது காதலியை பற்றி தவறாக பேசிய நண்பரை அடித்த கொலை செய்த நபர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

  சென்னையை அடுத்த கேளம்பாக்கம் கேளியம்மன் கோவில் பின்புறம் வாலிபர் ஒருவர் இரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக கேளம்பாக்கம் போலீசாருக்கு நேற்று மதியம் தகவல் கிடைத்துள்ளது.

  தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற  போலீசார் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் உதவி ஆணையாளர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

  விசாரணையில் இறந்துகிடந்தது, ஶ்ரீராமலு தெருவை சேர்ந்த லட்சுமிகாந்த்(20) என்பது தெரியவந்தது. மேலும் லட்சுமிகாந்த் கையில் பிரதீப், சூர்யா என பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து அதே பகுதியை சேர்ந்த 20 வயதான பிரதீப் மற்றும் சூர்யாவை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

  ALSO READ | பிரபல மாடல் மற்று நடிகை தூக்கிட்டு தற்கொலை... மனதை உருக்கும் கடிதம் எழுதி வைத்து மரணம்

  உயிரிழந்த லட்சுமிகாந்த் பிரதீப்குமாரின் காதலியை தவறாக பேசியதால் ஏற்பட்ட வாய் தகராறில் பிரதீப்குமார் பீர்பாட்டிலால் லட்சுமிகாந்தின் தலையில் அடித்துள்ளார். அப்போது லட்சுமிகாந்த் தப்பி ஓட முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததால், சதீஷ் கண்ணன் அவரின் தலையில் கல்லைபோட்டுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து தாக்கியதில் லட்சுமிகாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

  இதனை தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை 7 மணி நேரத்தில் பிடித்ததற்காக தனிப்படை போலீசாருக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

  செய்தியாளர்: ப.வினோத்கண்ணன், இசிஆர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, Crime News, Friends, Kelambakkam police station, Murder