Home /News /chennai /

சென்னைக்கு விரைவில் 2வது விமான நிலையம்.. விவசாயம் பாதிக்காத வகையில் ஏற்பாடு செய்ய விவசாயிகள் கோரிக்கை

சென்னைக்கு விரைவில் 2வது விமான நிலையம்.. விவசாயம் பாதிக்காத வகையில் ஏற்பாடு செய்ய விவசாயிகள் கோரிக்கை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

2nd Airport In Chennai | சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக சென்னை மக்கள் விடுத்து வரும் கோரிக்கை தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ளது. விவசாயம் பாதிக்காத வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில் இடத்தேர்வை இறுதி செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து இருந்தது. இந்த நான்கு இடங்களில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் ஆகிய இரண்டு இடங்களை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. அதில் ஒன்றை தமிழக அரசு இறுதி செய்ய பரிசீலித்து வருகிறது. பன்னூரில், 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. அதே போல, பரந்தூரில், 4 ஆயிரத்து 791 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. இரண்டு இடங்களிலும் இரு ஓடுபாதைகளுக்கு போதுமான இடமும் வான்வெளியும் உள்ளது.

    இந்த இரண்டு இடங்களுக்கும் ஒரு பயணி சென்றடைய எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் இந்த அறிக்கை கணக்கிட்டுள்ளது. இடத் தேர்வை இறுதி செய்ய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து பேசி உள்ளார். இந்த நிலையில் இரண்டு இடங்களில் விமான நிலையம் எங்கு அமைந்தாலும் விவசாயம் பாதிக்காத வகையில் மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Read More : சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து: ராமதாஸ் எச்சரிக்கை


    சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது தமிழக மக்களின் பெருங்கனவுகளில் ஒன்று. அதுமட்டுமின்றி, மாநிலத்தின் தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது. எனவே புதிய விமான நிலையத்தை அமைக்க வேண்டிய தேவையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய - மாநில அரசுகள் அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

    பன்னூர் அல்லது பரந்துரில் சென்னையின் 2வது விமான நிலையம் அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், இதனால் சுமார் 15 கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயம் பாதிக்காத வகையில் புதிய விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Chennai, Chennai Airport

    அடுத்த செய்தி