ஹோம் /நியூஸ் /சென்னை /

ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில் ஏசி கேஸ் வெடித்து விபத்து - இருவர் பலி

ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில் ஏசி கேஸ் வெடித்து விபத்து - இருவர் பலி

ஜாஸ் சனிமாஸ்

ஜாஸ் சனிமாஸ்

Chennai | ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில் ஏசி பழுது பார்த்த போது திடீரென கேஸ் வெடித்து இருவர் பலி, ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  சென்னை கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் ஜாஸ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகின்றது. அந்த நிறுவனத்தில் ஏசி பழுதாகியுள்ளது. அதை பழுது பார்க்க கடந்த மாதம் 30 ஆம் தேதி ஜாஃபர்கான் பேட்டையில் உள்ள பாரத் ஏசி சர்வீஸ் சென்டரில் இருந்து வந்த மூன்று நபர்கள் ஏசியை பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கேஸ் ஃபில்லிங்காக (filling) எடுத்து வந்திருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

  உடனே அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர்கள் 108 ஆம்புலன்சை வரவைத்து அந்த மூன்று பேரையும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த மூன்று பேருக்கும் 60 சதவீத தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

  அதன் பின்னர் மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த இந்திரகுமார் வயது (22) என்பவர் கடந்த 4ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் சூளைமேட்டைச் சேர்ந்த சின்னதுரை வயது (50) அவர் 6ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  அதனைத் தொடர்ந்து கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன் வயது (41) அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து அழைத்து சென்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

  Also see... ஆன்லைன் செயலி மூலம் ரூ 14.5 லட்சம் மோசடி.. நைஜீரியா ஆசாமி கைது

  இந்த சம்பவம் குறித்து புனித தோமையர் மலை (பரங்கிமலை) காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  செய்தியாளர்: சுரேஷ்,

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: AC gas Leak Accident, Chennai, Gas cylinder blast, Theatre