ஹோம் /நியூஸ் /சென்னை /

மாண்டஸ் புயல்: அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் உட்பட இருவர் பலி!

மாண்டஸ் புயல்: அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் உட்பட இருவர் பலி!

மின்சாரம் தாக்கி இருவர் பலி

மின்சாரம் தாக்கி இருவர் பலி

நேற்று மழை பெய்து கொண்டிருக்கும் வேளையில் இருவரும் அவர்கள் வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மடிப்பாக்கத்தில் புயலால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் இருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் 7வது தெருவை சேர்ந்தவர் 45 வயதான லட்சுமி. இவர் கூரை வீட்டில் வசித்து வந்ததால் மழை பாதிப்புக்கு அஞ்சி அவரது அண்ணன் மகன் ராஜேந்திரனுடன் சேர்ந்து அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதி சென்றுள்ளனர்.

மழை சற்று ஓய்ந்ததும் இருவரும் அவர்கள் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது மின்கம்பி அறுந்து விழுந்ததை கவனிக்காமல் அதை மிதித்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்தை சென்று இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Cyclone Mandous, Dead, Heavy Rainfall, Rain Update