ஹோம் /நியூஸ் /சென்னை /

அடுத்தடுத்து இறந்த 2 குழந்தைகள்.. மன உளைச்சலில் தாய் விபரீத முடிவு.. பல்லாவரத்தில் பகீர் சம்பவம்

அடுத்தடுத்து இறந்த 2 குழந்தைகள்.. மன உளைச்சலில் தாய் விபரீத முடிவு.. பல்லாவரத்தில் பகீர் சம்பவம்

மாதிரி படம்

மாதிரி படம்

Pallavaram News : பல்லாவரத்தில் 2 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் மன உளைச்சலில் தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை பழைய பல்லாவரம் ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் மனிஷா(20), தீனு(27) இவருக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. தீனு மட்டும் வேலூர் மாவட்டத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். மனிஷா பழைய பல்லாவரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், திருமணமான முதல் ஆண்டு மனிஷாவிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு ஒன்றரை வயது ஆகும்போது, திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக குழந்தை உயிரிழந்தது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மனிஷாவிற்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் 2வது குழந்தை பிறந்தது.

பிறந்த சில நாட்களில் அந்த குழந்தையும் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. இதனால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளான மனிஷா தினமும் குழந்தைகளை நினைத்து வீட்டில் அழுது கொண்டிருந்தார். இதனால் அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். ஆனாலும் எப்போதும் தனிமையில் இருந்து வந்தார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது படுக்கை அறைக்குள் சென்ற மனிஷா கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் மனிஷாவின் தாய் சுமித்ரா கதவை தட்டினார்.

ஆனால் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் துணையுடன் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மனிஷா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மனிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து உடனடியாக பல்லாவரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து சென்ற போலீசார் இறந்த மனிஷா உடலை மீட்டு அதனை பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் இறந்ததால் மனவேதனை அடைந்த தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : சுரேஷ் - பல்லாவரம்

தற்கொலை தீர்வல்ல: மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Chennai, Crime News, Local News