சென்னையில் செயல்பட்டு வரும் குழந்தைகள் உதவி மையத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு புகார் வந்தது. அதில் 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் திருமணம் செய்துள்ளதாகவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தும்படி குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் காருண்யா தேவிக்கு குழந்தைகள் அமைப்பு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கொடுங்கையூர் பகுதியில் தனது மாமா வீட்டில் தங்கி படித்து வரும் 15 வயது சிறுமியும், அவருடன் படித்துவரும் பதினேழு வயது சிறுவனும் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நண்பனின் மனைவிக்கு பாலியல் தொல்லை
இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஏழாம் தேதி புளியந்தோப்பு பகுதியில் உள்ள எல்லை அம்மன் கோயில் வாசலில் வைத்து சிறுவன் அந்த சிறுமிக்கு தாலி கட்டியது தெரியவந்தது. இந்த சம்பவத்தை சிறுவனின் நண்பர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து, அதனை மற்றவர்களுக்கு அனுப்ப, தற்போது அந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.