சென்னையில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த 1,600 மரங்களின் கிளைகள் அகற்றம்..
சென்னையில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த 1,600 மரங்களின் கிளைகள் அகற்றம்..
பாதுகாப்பற்ற முறையில் இருந்த 1,600 மரங்களின் கிளைகள் அகற்றம்
Chennai Corporation : சென்னையில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த 1,600 மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும், 688 மரங்களின் கிளைகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
சென்னை கே.கே.நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் சாலையில் சென்ற கார் மீது மரம் சாய்ந்ததில் பெண் ஒருவர் பலியானார். மழை நீர் வடிகால் பணிக்காக மரத்தின் அருகே குழி தோண்டப்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக புகார் எழுந்தது. இதேபோல் சென்னை முழுவதும் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், மரங்களின் உறுதி தன்மையை ஆராய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் எழுந்தது.
இந்நிலையில், தாழ்வாக மற்றும் காய்ந்த நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் வெட்டி அகற்ற உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மண்டலங்களுக்கும் சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் 118 சாலைகளில் உள்ள 2,699 மரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 2,302 மரங்கள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பது தெரியவந்தது. இவற்றில் கடந்த 2ம் தேதி வரை மொத்தம் 1,614 மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. மீதம் உள்ள 688 மரங்களின் கிளைகளை அகற்ற சென்னை மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.