முகப்பு /செய்தி /சென்னை / 10-ம் வகுப்பு மாணவனை நிர்வாணப்படுத்தி ஆபாச செயல்கள் செய்த சக மாணவர்கள்.. சென்னை கேந்திர வித்யாலயா பள்ளியில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

10-ம் வகுப்பு மாணவனை நிர்வாணப்படுத்தி ஆபாச செயல்கள் செய்த சக மாணவர்கள்.. சென்னை கேந்திர வித்யாலயா பள்ளியில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

கோப்பு படம்

கோப்பு படம்

புகார் அளித்த மாணவரை கடுமையாக தாக்கி நிர்வாணமாக்கி பின் ஆபாச செயல்கள் செய்து அடித்துள்ளனர்.

  • Last Updated :
  • Chennai, India

கேகே நகர் கேந்திர வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனை சக மாணவர்கள் அடித்து ஆபாச செயல்கள் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேகே நகர் கேந்திர வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவருக்கு அதே வகுப்பில் படித்து வரும் மற்றொரு மாணவர் தொடர்ச்சியாக பிரச்சனை செய்து வந்துள்ளார். இதனால் அந்த மாணவர் தலைமை ஆசிரியரிடம் சென்று முறையிட்டுள்ளார்.

இந்த நிலையில் எதிர்தரப்பு மாணவர், தனது நண்பர்கள் 10 நபர்களுடன் சேர்ந்து புகார் அளித்த மாணவரை கடுமையாக தாக்கி நிர்வாணமாக்கி பின் ஆபாச செயல்கள் செய்து அடித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர் உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில் பெற்றோர் விசாரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர் நடந்ததை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவரின் பெற்றோர் கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் வடபழனி காவல் உதவி ஆணையர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ராகிங் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டுள்ளதா? எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞரை பாலியல் வன்கொடுமை செய்த 4 இளம்பெண்கள்!? காரில் கடத்தி கட்டிப்போட்டு வன்கொடுமை என பரபரப்பு குற்றச்சாட்டு! 

top videos

    இச்சம்பவம் குறித்து திரைப்பட பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Chennai, Child Abuse, Crime News, Kendriya vidyalaya school, School boy