ஹோம் /நியூஸ் /சென்னை /

பீர் பாட்டில்... கல் வீச்சு: பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்.. சென்னை சென்ட்ரலில் திடீர் பரபரப்பு!

பீர் பாட்டில்... கல் வீச்சு: பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்.. சென்னை சென்ட்ரலில் திடீர் பரபரப்பு!

சென்னை சென்ட்ரல்

சென்னை சென்ட்ரல்

100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரிக்கு ‘ஜே’ என கூறி பீர் பாட்டில்கள் மற்றும் கற்களை எடுத்து வந்து ரயில் நிலையத்தை தாக்கி உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பீர் பாட்டில் மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராயபேட்டையில் உள்ள நியூ கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவர் பேருந்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளார். வரும் வழியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரிக்கு ‘ஜே’ எனக் கூறி பல்லவன் டெப்போவில் பேருந்தை நிறுத்தி நியூ கல்லூரி மாணவரை தாக்கி உள்ளனர்.

அங்கிருந்து ஓடிய நியூ கல்லூரி மாணவர், சென்ட்ரல் ரயில் நிலையம் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் தன்னை காப்பாற்றுமாறு கூறியுள்ளார். உடனடியாக அந்தக் காவலர் அந்த மாணவனை மீட்டு ரயில் நிலையத்திற்குள் அனுப்பி வைத்தார்.

சற்று நேரத்தில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரிக்கு ‘ஜே’ என கூறி பீர் பாட்டில்கள் மற்றும் கற்களை எடுத்து வந்து ரயில் நிலையத்தை தாக்கி உள்ளனர்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். உடனடியாக ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மாணவர்களை விரட்ட அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேர், நந்தனம் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 7 என மொத்தம் 14 மாணவர்களை ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பிடித்து ரயில்வே காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Chennai, Pachayappa's college, Railway Station, Students