ஹோம் /நியூஸ் /சென்னை /

ஓராண்டுக்கு தொடர் அன்னதானம்... வள்ளலார் பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஓராண்டுக்கு தொடர் அன்னதானம்... வள்ளலார் பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலை துறை சார்பில் நடைபெறும் வள்ளலார் முப்பெரும் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலை துறை சார்பில் நடைபெறும் வள்ளலார் முப்பெரும் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “பெரியார் பிறந்தநாள் விழாவை சமூகநீதி நாளாகவும் அம்பேத்கர் பிறந்தாள் விழாவை சமத்துவ நாளாகவும் அறிவித்தது திராவிட மாடல் ஆட்சி. இந்த நிகழ்ச்சி நடைபெறுவது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஏன் அதிரிச்சியாக கூட இருக்கலாம் என்றார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலை துறை சார்பில் நடைபெறும் வள்ளலார் முப்பெரும் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வள்ளலார்- 200 இலட்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு பேசிய முதலமைச்சர், 100 கோடி ரூபாய் மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டும்பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.

    மேலும், “பெரியார் பிறந்தநாள் விழாவை சமூகநீதி நாளாகவும் அம்பேத்கர் பிறந்தாள் விழாவை சமத்துவ நாளாகவும் அறிவித்தது திராவிட மாடல் ஆட்சி. இந்த நிகழ்ச்சி நடைபெறுவது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஏன் அதிர்ச்சியாக கூட இருக்கலாம் என்றார்.

    அமைச்சர் சேகர்பாபு கோட்டைக்கு வருவதைவிட கோவிலுக்கு செல்லவது தான் அதிகம். ஒருநாளைக்கு 3 ஊர்களில் இருக்கும் வெவ்வேறு கோவில்களுக்கு சென்று பணியை செய்பவர் சேகர்பாபு. ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல திமுக, ஆனால் ஆன்மிகத்தை தங்களது சொந்த நலனுக்கும் , உயர்வு தாழ்வு கற்பிக்கவும் பயன்படுத்துவோருக்கு எதிரானதுதான் திமுக.

    பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்ற வள்ளுவரின் மண் தமிழ் மண். நட்ட கல் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் எனும் சித்தர்கள் உலவியது , இறைவன் ஒருவனே இறைவன் ஜோதி மயமானவன் என்ற வள்ளலார் வாழ்ந்த மண். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்தை அண்ணா முன்வைத்தார். அறப்பணிகளை கண்காணிப்பதற்காகவே , கோட்டைக்கு வருவதை விட கோயிலுக்கு அதிகம் செல்பவர் சேகர்பாபு. ஆன்மிக செயற்பாட்டாளர் சேகர்பாபு.

    Read More: திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தேர்தல் அறிக்கையில் கூறியவாறு வடலூரில் வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கப்படும். 100 கோடி மதிப்பில் அதற்கான பணி நடக்கிறது. விரைவில் கட்டுமான பணி தொடங்கும். வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு ஓராண்டுக்கு தொடர் அன்னதானம் வழங்கப்பட உள்ளது . அதற்கு 3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மணிமேகலையின் அமுத சுரபி , வள்ளலாரின் அணையா நெருப்பு வழியில் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.” என்றார்.

    Published by:Srilekha A
    First published:

    Tags: DMK, MK Stalin