முகப்பு /செய்தி /சென்னை / புதன்கிழமை பவர்கட் லிஸ்ட் இதோ.. சென்னையின் முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு..

புதன்கிழமை பவர்கட் லிஸ்ட் இதோ.. சென்னையின் முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு..

மாதிரி படம்

மாதிரி படம்

Power Shut Down : சென்னையின் முக்கிய பகுதிகளில் வரும் புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையின் முக்கிய பகுதிகளில் வரும் புதன்கிழமை (08.03.2023) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “சென்னையில் வரும் புதன்கிழமை (08.03.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், வியாசர்பாடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின்தடை ஏற்படும் பகுதிகள் :

அம்பத்தூர் பகுதி : என்.என்.எஸ், எச்.ஐ.ஜி, எம்.ஐ.ஜி, சின்ன நொளம்பூர், பொன்னியம்மன் நகர், முகப்பேர் மேற்கு பிளாக், மோகன்ராம் நகர், ரெட்டிபாளையம் பகுதி, வானகரம் ரோடு, சங்கர் சீலிங்க் ரோடு, வெள்ளாளர் தெரு, நலபள்ளி சாலை, பள்ளி சாலை, சந்தோசம் சாலை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

வியாசர்பாடி பகுதி : செம்பியம் கே,கேஆர் நகர், சத்தியராஜ் நகர், ராயல் அவென்யூ, அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் தெரு, பர்மா காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின்தடை ஏற்படும். எனவே, அன்றைய தினம் அப்பகுதியை சேர்ந்த மக்கள் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Local News, Power Shutdown