ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

தீபாவளிக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே பஸ் ஏறலாம் - ஹேப்பி நியூஸ் சொன்ன ஆட்சியர்

தீபாவளிக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே பஸ் ஏறலாம் - ஹேப்பி நியூஸ் சொன்ன ஆட்சியர்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

Kilambakkam Bus Terminus | வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.     

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chengalpattu, India

    தீபாவளி சிறப்பு பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது, இந்த பேருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு,மதுரை, திருநெல்வேலி ,திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, பாபநாசம், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு  இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் ஏறி பயணம் செய்யலாம். குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், படப்பை, கண்டிகை, திருப்போரூர், கிளாம்பாக்கம், மாம்பாக்கம் போன்ற பகுதிகளை சேர்ந்த பயணிகள் தென் மாவட்டங்களுக்கு செல்ல  கோயம்பேடு சென்று ஏற வேண்டிய அவசியம் இல்லை,

    அதற்கு பதிலாக சிறப்பு ஏற்பாடாக மேற்கொள்ளப்பட்டுள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்துகள் இங்கு வந்து பயணிகளை ஏற்றி செல்லும்.  இந்த பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள்  குறித்து கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.

    Also Read : பெருங்களத்தூர் ரூட் வேண்டாம்.. இந்த வழியாக போனால் தீபாவளி டிராஃபிக் இருக்காது

    இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வந்து ஏறி பயணம் செய்யலாம். இங்கு வரும் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள், சுகாதாரம், பயோ டாய்லெட், மற்றும் மருத்துவ வசதி  உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் பயணிகளுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள்.

    இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்பு  பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. தினமும் 250 பேருந்துகள் வீதமும் அதற்கு மேலும் வர வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய மேலாளர் லட்சுமி நாராயணன் பேசுகையில், பயணிகளுக்கு சிறப்பான, பாதுகாப்பான பயணத்திற்கு இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் குடிநீர் வசதி, மருத்துவ வசதி, கழிப்பிட வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளோம் மூன்று நாட்களுக்கு பேருந்துகள் இங்கு இருந்து புறப்பட்டு செல்லும் என்று அவர் தெரிவித்தார்.

    Published by:Vijay R
    First published:

    Tags: Chengalpattu, Deepavali