தாம்பரம் அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பெண் தூக்கி வீசப்படும் காட்சிகள் சி.சி.டிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வனஜா (வயது-55) இவர் தாம்பரம் அடுத்த முடிச்சூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக முடிச்சூர் பகுதியில் உள்ள சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர் வனஜா மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
பலத்த காயம் அடைந்த வனஜாவை உடனே அங்குள்ள பொது மக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்த சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், இறந்தவரின் உடலை உடல் கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Must Read : ஆன்லைன் ரம்மி-க்கு மீண்டும் ஒரு உயிர் பலி.. பணத்தை இழந்ததால் பெயிண்டர் தற்கொலை
உறவினர் வீட்டுக்கு வந்து நபர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - சுரேஷ்.
உங்கள் நகரத்திலிருந்து(Chengalpattu)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.