Home /News /chengalpattu /

தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு கிராமம்... தேசியக்கொடியை தினமும் ஏற்றி சல்யூட் அடித்து செல்லும் பொதுமக்கள்

தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு கிராமம்... தேசியக்கொடியை தினமும் ஏற்றி சல்யூட் அடித்து செல்லும் பொதுமக்கள்

தினந்தோறும் தேசியக்கொடி ஏற்றி நாட்டுப்பற்றை வளர்க்கும் கிராம மக்கள்

தினந்தோறும் தேசியக்கொடி ஏற்றி நாட்டுப்பற்றை வளர்க்கும் கிராம மக்கள்

Chengalpattu | இந்திய நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை காக்க முன் உதாரணமாக இருக்கும் சிறுதாமூர் கிராம மக்கள் . கடந்த நான்கு ஆண்டுகாலமாக தேசியக்கொடியை தினந்தோறும் ஏற்றி சல்யூட் அடித்து செல்லுகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chengalpattu, India
    செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் ஆன சிறுதாமூர் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியினர் அடிப்படை தொழிலான விவசாயத்தை முற்றிலும் நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    இதில் பூக்கள், காய்கறிகள், பழ வகைகள் நெற்பயிர் என பயிரிட்டு வருகின்றனர். இவர்கள் விவசாயத்தையே சார்ந்து வாழ்ந்து வரும் நிலையில் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் இருப்பதால் அனைத்து பிரச்சனைகளுக்கும் சுமார் 80 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று தங்களது பிரச்சினைகளையும் தேவைகளையும் தீர்க்க வேண்டிய நிலையில்  உள்ளனர்.

    இந்த கிராமத்தில் இன்றைய தலைமுறை அறிந்து கொள்ளும் வகையிலும் இளைஞர்கள் மத்தியில் தேசப்பற்றை வளர்க்கும் விதத்திலும் தினமும் தேசியக் கொடியேற்றி, மரியாதை செலுத்தும் நிகழ்வு கடந்த 4 ஆண்டுகாலமாக தினந்தோறும் நடைபெற்று வருகிறது. தினமும் காலை 8:30 மணிக்கு தவறாமல் தேசியக் கொடியை ஏற்றி கொடிக்கம்பத்திற்கு வீரவணக்கம் செலுத்தி விட்டு, நாட்டுப்பண் தேசிய கீதம் இசைத்து சல்யூட் அடித்து செல்வதை வழக்கமாக இந்த கிராம மக்கள் கொண்டுள்ளனர். 

    மேலும் தினந்தோறும் கொடிக்கம்பத்திற்கு கோலமிட்டு சுத்தம்செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பகுதியில் தினந்தோறும் ஒலிக்கப்படும் தேசிய கீதத்தை கேட்டயுடன் அந்தந்த பகுதிகளில் பணிபுரியும் விவசாயக் கூலிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் பணிகளை நிறுத்தி விட்டு கொடிக்கு மரியாதை செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.



    Also see... 1000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன காந்தி சிலை!

    இது குறித்து அந்த கிராம மக்களிடையே கேட்டதற்கு,  இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் தேசப் பற்றை வளர்ப்பதற்காக தினமும் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தி வருவதாக தெரிவித்தனர்.

    இந்நிலையில் இந்த வருடம் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் சிறுதாமூர் கிராமம் இந்தியாவுக்கு மிகப்பெரிய உதாரணமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chengalpattu, Independence day

    அடுத்த செய்தி