வேடந்தாங்கல் ஏரியில் நீர் நிரம்பியதால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் குவிந்து வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த ஆண்டு பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக 16 அடி உயரமுள்ள வேடந்தாங்கல் ஏரி, தற்போது 15.5 அடிவரையில் நீர் நிறைந்துள்ளது.
1 அடி தண்ணீர் ஏரியில் நிரம்பினால் முழு கொள்ளளவு எட்டும் நிலையில், தற்போது 10,000க்கும் மேற்பட்ட வகைகளிலான பறவைகள், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்து வருகின்றன. ஓரிரு தினங்களில் வர்ணனாரை உள்ளிட்ட பறவைகள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக இந்த நேரங்களில் பாகிஸ்தான், பர்மா, இலங்கை, சைபீரியா போன்ற வெளிநாடுகளில் இருந்து வெளிர் உடல் அரிவாள் மூக்கன், நத்தக்குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழை கடா, கரண்டிவாயன், தட்ட வாயன், பெரிய நீர்க்காகம் உள்ளிட்ட 26 வகையான பறவைகள் வந்து செல்லும்.
வெளிநாடுகளில் இருந்து அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை இனப்பெருக்கத்திற்காக வந்து செல்லும் பறவைகள் காண்பதற்காக வெளிநாட்டினர் வெளி மாநில வெளி மாவட்டங்களில் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
இதையும் படிங்க | செங்கல்பட்டில் சிறுத்தை நடமாட்டமா? - வீடியோ குறித்து வனத்துறை விளக்கம்!
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பறவைகள் வரத் தொடங்கியுள்ளது. தற்போது சுமார் 10 ஆயிரம் பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலத்திற்கு வந்துள்ளன. மேலும் ஏரி நிரம்பியுள்ளதால் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பறவை ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் ஆர்வமாக சென்று பறவைகளை கண்டு ரசிக்கின்றனர்.
செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bird Sanctuary, Chengalpattu, Local News