செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில், அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு சென்னை சென்ற 13 அதிமுக தொண்டர்கள் உட்பட, 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கொடுங்காலூர் பகுதியில் இருந்து சென்னையில் நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வேனில் 20 மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, மதுராந்தகம் அந்த வேன் வந்து கொண்டிருந்தபோது, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரட்டை ஏரிக்கரை என்ற இடத்தில் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மாற்று சாலையில் சென்றது.
அப்போது, திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து மற்றும் அதிமுகவினர் வந்த வேன்மீது அந்த லாலி மோதியதில் வேனில் பயணம் செய்த 13 பேரும் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 6 பேரும் காயமடைந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அவர்கள் அனைவரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Must Read : வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு... கணவன் மீது தீ வைத்த மனைவி கைது
இந்த விபத்தால் திருச்சி-சென்னை மற்றும் சென்னை - திருச்சி ஆகிய இரண்டு வழிகளிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் - ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு.
உங்கள் நகரத்திலிருந்து(செங்கல்பட்டு)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.