ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

4 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் மாயம்.. லாட்ஜில் 2வது கணவருடன் வசமாக சிக்கிய கேடி லேடி..!

4 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் மாயம்.. லாட்ஜில் 2வது கணவருடன் வசமாக சிக்கிய கேடி லேடி..!

4 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண்

4 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண்

ஏற்கனவே 3 திருமணம் செய்ததை மறைத்து 4வது திருமணம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tambaram | Tamil Nadu | Chennai [Madras]

தாம்பரத்தில் நகை, பணத்துடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் 40 நாட்கள் கழித்து அவரது இரண்டாவது கணவருடன் கைது செய்தனர்.

சென்னை மேற்கு தாம்பரம்,ரங்கநாதபுரம், 1வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார்(50) சொந்தமாக டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மேகலா, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் நடராஜன்(30) கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பேக்கரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அபிநயா(28), என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி  இருவருக்கும் ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்று உள்ளது.

திருமணம் ஆகி ஒன்றரை மாதம் ஆன நிலையில் கணவன் மனைவிக்குமிடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வீட்டில் இருந்த 17 சவரன் நகை மற்றும் 20,000 ரூபாய் ஆகியவற்றுடன் அபிநயா மாயமாகி உள்ளார்.

எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் அச்சமடைந்த நடராஜன் இச்சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  மேலும், 40 நாட்கள் தேடுதலுக்கு பிறகு பழையமகாபலிபுர சாலை விடுதி ஒன்றில் தங்கியிருந்த அபிநயாவை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அபிநயா(28) மதுரையை சேர்ந்தவர் என்பதும் இவர் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரை கடந்த 2011 ஆண்டு  முதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு  மதுரையை சேர்ந்த செந்தில் குமாரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்துள்ளார்.

இதையும் படிங்க | தான் இறந்ததாக நம்பவைக்க இன்னொரு பெண்ணை கொன்று நாடகமாடிய பெண் கைது : அம்பலமான பகீர் சம்பவம்!

இவர்களுக்கு 8 வயதில் மகன் இருக்கும் நிலையில்,  செந்தில்குமாரை பிரிந்து கேளம்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். பின்னர் அவரிடமிருந்தும் பிரிந்து நான்காவதாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் நடராஜனுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது தெரியவந்தது.

ஆனால் அபிநயா இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட செந்தில்குமாருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நடராஜன் வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற 17 சவரன் தங்க நகைகளை இரண்டாவது கணவர் செந்தில்குமாருடன் சேர்ந்து மதுரையில் உள்ள நகைக்கடையில் விற்று பணத்தை செலவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

பின்னர் மதுரை சேர்ந்த செந்தில்குமாரை கைது செய்த போலீசார் இருவரையும் தாம்பரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: சுரேஷ்

First published:

Tags: Cheating case, Crime News, Local News, Tambaram