ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

தாம்பரத்தில் லாரி டயர் வெடித்து விபத்து - சம்பவ இடத்திலே இருவர் உயிரிழந்த பரிதாபம்

தாம்பரத்தில் லாரி டயர் வெடித்து விபத்து - சம்பவ இடத்திலே இருவர் உயிரிழந்த பரிதாபம்

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

Chennai : கடப்பா கற்கள் ஏற்றி வந்த லாரியின் முன்பக்க டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    தாம்பரம் எருமையூர் அருகே கடப்பா கற்கள் ஏற்றி வந்த லாரியின் டயர் வெடித்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

    ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து கடப்பா கல் ஏற்றிக்கொண்டு தமிழகம் வந்த லாரி ஒன்று தாம்பரம் அடுத்த எருமையூர் செக்போஸ்ட் அருகே விபத்தில் சிக்கியது. லாரியின் முன்பக்க டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் கடப்பா கல், லாரியின் மீது அமர்ந்திருந்த சிவா ரெட்டி, வரதராஜீ, ஆகியோர் மீது கற்கள் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.  கடப்பா கல்லில் சிக்கியவர்களை தாம்பரம் தீயணைப்பு துறையினர் மீட்டு, உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதையும் படிங்க: தேவர் குருபூஜை - தங்க கவசத்தை பெறப்போவது யார் ? ஓபிஎஸ் -ஈபிஎஸ் இடையே போட்டி

    கடப்பா கல்லில் சிக்கியிருந்த ஓட்டுநர் லட்சுமணய்யா(36), அவரது மகன் வாசு, மற்றும் சுப்பா நாயுடு(50), ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

    செய்தியாளர்: சுரேஷ்

    Published by:Arunkumar A
    First published:

    Tags: Accident, Tambaram