ஹோம் /நியூஸ் /Chengalpattu /

பேருந்தில் தொங்கியபடி மாணவர்கள் அட்டகாசம்.. கேலி, கிண்டல் செய்ததால் கீழே இறங்கிய ஓட்டுனர்...

பேருந்தில் தொங்கியபடி மாணவர்கள் அட்டகாசம்.. கேலி, கிண்டல் செய்ததால் கீழே இறங்கிய ஓட்டுனர்...

பேருந்தில் தொங்கியபடி மாணவர்கள் அட்டகாசம்.. கேலி, கிண்டல் செய்ததால் கீழே இறங்கிய ஓட்டுனர்...

பேருந்தில் தொங்கியபடி மாணவர்கள் அட்டகாசம்.. கேலி, கிண்டல் செய்ததால் கீழே இறங்கிய ஓட்டுனர்...

Chengalpet District : செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே மாணவர்கள் பேருந்தில் அட்டகாசம் செய்தனர். இதனால் கோபம் அடைந்த ஓட்டுனர் வண்டியை நிறுத்தி கீழே இறங்கினார். அதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே மாணவ மாணவர்கள் அட்டகாசம் செய்யும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சார்பில் கிராமப்புறங்களில் செல்லும் மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டமானது நடைமுறையில் உள்ளது. செங்கல்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி கல்லூரியில் கிராமப்புறத்தை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இவர்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச பேருந்து அட்டையை பயன்படுத்திய பெரும்பாலும் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு பேருந்தில் பயணம் செய்யும்போது மாணவர்கள் பலர் அட்டகாசம் செய்து வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில்  செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே, செங்கல்பட்டில் இருந்து சித்தனாக்காவூர் செல்லும் அரசு பேருந்தில் மாணவர்கள் அட்டகாசம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து ஓட்டுநர் , மாணவர்களை உள்ளே ஏறுங்கள் என கூச்சலிட்டும் ஓட்டுநரை மதிக்காமல் கேலி கிண்டல் செய்தனர்.

குறிப்பாக  ஓடும் பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில்  தொங்கிக் கொண்டும் பேருந்து, மேல் கூரையில்  ஏறவும் முயற்சி செய்யும் வீடியோ பதிவாகியுள்ளது. இதனைக் கண்ட காவல்துறையை சேர்ந்த ஒருவர் , ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் மேலே ஏறுங்கள் என கூறியதற்கு, மாணவர்கள் சொல்பேச்சை கேட்காமல் வாக்குவாதத்திலும் ஈடுபடும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

Also see... எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு : தாய்க்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவன்

அதனை அடுத்து, சிறிது நேரம் பேருந்துக்குள் ஏறுவதைப் போல பாவனை செய்துவிட்டு மீண்டும் படிக்கட்டில் தொங்கி சென்றனர்.  மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இப்படி ஒரு பயணம் செய்வதை யரும் ஒழுங்கு படுத்தாமல் முறையாக காவலர்கள் உள்ளிட்டவற்றை நியமிக்காமல் இருப்பதே இது போன்ற சீர்கேடுகளுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு

First published:

Tags: Chengalpet, Govt Bus, Student