ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் தாயை கட்டையால் அடித்து கொன்ற மகன் கைது

கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் தாயை கட்டையால் அடித்து கொன்ற மகன் கைது

 தாயை கட்டையால் அடித்து கொன்ற மகன்...

தாயை கட்டையால் அடித்து கொன்ற மகன்...

Chengalpattu | மாமல்லபுரம் அருகே கஞ்சா வாங்க பணம் தராத தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chengalpattu, India

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஒத்தவாடைபகுதியில் வசிப்பவர் பத்மினி. வயது 60, அதே பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கும் சங்கு, மணி, துப்பட்டா, துணிப்பை இவைகளை சாலையோரம் போட்டு விற்பனை செய்து வந்தார். இவரது இளையமகன் முரளி, வயது 37. கஞ்சா போதைக்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு முரளி தாய் பத்மினியிடம் பணம் கேட்டுள்ளார். ஏற்கனவே மகன் கஞ்சா போதையில் இருந்ததால் பணம் தர மறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த முரளி தாயை கண்மூடித்தனமாக தாக்கி வயிற்றில் மிதித்துள்ளான். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் அடிக்காதே வயிறு வலிக்கிறது என கண்ணீர் விட்டு கெஞ்சியுள்ளார்.

    கஞ்சா போதை கண்ணை மறைத்ததால் தாய் என்றும் பாராமல் மீண்டும் அருகில் இருந்த கட்டையை எடுத்து பத்மினி தலையில் அடித்துள்ளான். வலி தாங்க முடியாமல் கதறியுள்ளார். அவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பத்மினி உயிரிழந்தார்.  இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து முரளியை தேடினர்.

    Also see... பழையாறு அருகே சிதறிக்கிடந்த எலும்புக்கூடுகள்... போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

    அவர் தாய் இறந்தது கூட தெரியாத அளவிற்கு போதையுடன் அதே பகுதியில் பதுங்கி இருந்தார். அதன் பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chengalpattu, Crime News, Mother, Murder