செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 14 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 187 வெளிநாடுகளை சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதனால், போட்டி அரங்கம் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்க உள்ள சொகுசு விடுதிகள் உள்பட மாமல்லபுரத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
அங்கே, போட்டி நடந்து முடியும் வரையில் 4,000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக, திருவாரூர், தஞ்சாவூர், சேலம், நாகர்கோயில், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த போலீஸார் மாமல்லபுரத்துக்கு வந்துள்ளனர்.
மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பாதுகாப்பு பணிக்காக போலீஸார் வர இருக்கிறார்கள். பாதுகாப்பு பணிக்காக வரும் போலீஸார் தங்குவதற்காக, மாமல்லபுரத்தின் சுற்றுப்புற பகுதிகளில் 20 திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு போலீஸாருக்கு உணவு தயாரிப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதன்மூலம், போலீஸாருக்கு தாமதம் இன்றி சரியான நேரத்தில் உணவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும், திருமண மண்டபத்தில் தங்கும் போலீஸார் போட்டி அரங்கத்துக்கு செல்ல வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் அரங்கம்
இந்நிலையில், போட்டி அரங்க வளாகத்தின் அருகே 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் வாகன ஓட்டுநர்கள், போலீஸார் மற்றும் இதர பணியாளர்களுக்காக தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 10 நடமாடும் கழிவறை வசதி கொண்ட வாகனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Must Read : ஆவின் பால் பாக்கெட்டுகளில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் (படங்கள்)
இந்த பாதுகாப்பு பணியில் 400க்கும் மேற்பட்ட பெண் போலீஸார் ஈடுபட உள்ளனர். போட்டி நடைபெறும் வளாகத்தில் போதுமான கழிவறைகள் உலகத்தரம் இந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளன. காவல் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. போட்டி நடைபெறும் வளாகத்தில் 110 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - ராபர்ட் எபினேசர்.
உங்கள் நகரத்திலிருந்து(செங்கல்பட்டு)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.