Home /News /chengalpattu /

மணமகன் தலையை வெட்டி பழிக்கு பழி வாங்குவதாக சவால் - போலீஸ் பாதுகாப்புடன் நடந்து முடிந்த ரவுடி திருமணம்!

மணமகன் தலையை வெட்டி பழிக்கு பழி வாங்குவதாக சவால் - போலீஸ் பாதுகாப்புடன் நடந்து முடிந்த ரவுடி திருமணம்!

ரவுடி திருமணம்

ரவுடி திருமணம்

போலீசாரால் தேடப்பட்டு வரும் மிகப்பெரிய ரவுடியின் தம்பி திருமணத்தை போலீசார் பலத்த பாதுகாப்பு கொடுத்து நடத்தி வைத்தது ரவுடிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chengalpattu
    பிரபல ரவுடியின் தம்பி திருமணத்தில் மணமகன் தலையை வெட்டி எடுத்து பழிக்கு பழி கொலை செய்யவுள்ளதாக எதிர் ரவுடிகள் சவால் விட்டதை தொடர்ந்து பலத்த போலீசார் பாதுகாப்புடன் ரவுடியின் தம்பி திருமணம் மாமல்லபுரம் அருகே நடைபெற்றது.

    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த நடுவீரபட்டு பகுதியை சேர்ந்த ரவுடி லெனின் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது தம்பி நரேஷ்பாபுவும், ரவுடியாகத்தான் வலம் வந்துள்ளார். இவர் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



    இந்நிலையில் நேற்று மாலை சென்னை கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் கிருஷ்ணன்காரணை பட்டிப்புலத்தில் உள்ள லீலாவதி திருமண மண்டபத்தில் ரவுடி நரேஷ்பாபுக்கும் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த காலின் ஹேனா செரின் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. நடுவீரப்பட்டு சோமங்களம் சுற்றுவட்டார பகுதியில் மிகப்பெரிய ரவுடியாக வலம் வந்த லெனின் எதிரியான மேத்யூ, சச்சின் தற்போது தலைமறைவாக உள்ளனர். கடந்த ஆண்டு இவர்களுக்கும் லெனின் கும்பலுக்கும் ஏற்பட்ட மோதலில் லெனின் தரப்பினர் மேத்யூவின் நண்பர் அபிஷேக் என்பவரின் தலையை வெட்டி எடுத்து வீசியுள்ளனர்.

    ALSO READ | ‘வா சேர்ந்து வாழலாம்’... திருமண நாளில் மனைவியை வீட்டுக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய கணவன்

    இதற்கு பழி தீர்க்க ரவுடி லெனின் தம்பி நரேஷ்பாபு  தலையை திருமணம் அன்றே வெட்டி எடுத்து அபிஷேக் தலை கிடந்த அதே இடத்தில் வைப்போம் என ரவுடி மேத்யூ கூட்டாளிகள் சபதமிட்டுள்ளனர். இதுகுறித்து தாம்பரம் சரக பெஷல்டீம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் மேத்யூ கூட்டாளிகள் அருவா, கத்தி, போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மாறு வேடத்தில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நேற்றே பதுங்கி விட்டதாக போலீசாருக்கு கூடுதல் தகவலும் கிடைத்தது.



    ரகசிய தகவலின் அடிப்படையில் திருமணம் நடக்கும் இடத்தில் இருதரப்பு ரவுடிகளால் சண்டை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்பதாலும் திருமணம் நடைபெறவுள்ள இடத்தில் கொலை சம்பவம் நடந்தால் ஆது பெரிய கலவரமாக மாறும் என்பதாலும் பிரச்சனை ஏதேனும் ஏற்பட்டால் ரவுடிகளை முழங்காலுக்கு கீழ் சுட்டுப்பிடிக்கும் உத்தரவுடன் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் கை துப்பாக்கியுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ALSO READ | திருமணத்திற்கு மறுத்த காதலி.. கொலை செய்து புதைத்த காதலன்- தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்

    போக்குவரத்து போலீசார் இசிஆர் வழியில் வரும் அனைத்து வாகனங்களையும் தடுப்புகளை அமைத்து நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுபோல் ரவுடி திருமணத்தையும் பாதுகாப்பாக நடத்த தீவிர சோதனைக்கு உட்படுத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி நிறைவுற்று நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் பாதுகாப்புடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Chengalpet, Crime News, Marriage, Rowdies, Security guards

    அடுத்த செய்தி