ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

டாடா ஏசி வாகனம் மோதி பலியான கர்ப்பிணி பசு... சாலையை கடக்க முயன்றபோது நேர்ந்த சோகம்!

டாடா ஏசி வாகனம் மோதி பலியான கர்ப்பிணி பசு... சாலையை கடக்க முயன்றபோது நேர்ந்த சோகம்!

டாடா ஏசி வாகனம் மோதி பலியான மாடு

டாடா ஏசி வாகனம் மோதி பலியான மாடு

Chengalpet accident | சாலையை கூட்டமாக பசுமாடுகள் கடந்து சென்று கொண்டிருந்த போது அதிவேகமாக சென்ற டாடா ஏசி மோதியதில் நிறைமாத கர்ப்பிணி பசு உயிரிழப்பு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chengalpattu | Singaperumalkoil

செங்கல்பட்டு அருகே சாலையை கடக்க முயன்றபோது டாடா ஏசி வாகனம் மோதி கர்ப்பிணி பசு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மப்பேடு பகுதியில் இருந்து  மறைமலைநகரை நோக்கி வினோத் (37) என்பவர் டாட்டா ஏசி வேனை  ஓட்டி வந்துள்ளார். வேன் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த ஸ்ரீ பெருமந்தூர் பிரதான சாலை ஆப்பூர் அருகே வந்துள்ளது. அப்போது  50க்கும் மேற்பட்ட மாடுகள் ஆங்காங்கே சாலையை கடந்து சென்றுள்ளன. வினோத் ஓட்டியவேன் வந்த வேகத்தில் பசு மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பசு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் மாட்டின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு.

First published:

Tags: Accident, Chengalpet, Cow, Death, Local News