முகப்பு /செய்தி /Chengalpattu / சிக்கன் 65ல பீஸ் எங்க? கஞ்சா கும்பல் அட்டூழியம்

சிக்கன் 65ல பீஸ் எங்க? கஞ்சா கும்பல் அட்டூழியம்

உணவகத்தில் தகராறு

உணவகத்தில் தகராறு

உணவக ஊழியர்களிடம் கைகலப்பில் ஈடுபட்ட கும்பல் காரில் வைத்திருந்த கத்தி ,அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி பொதுமக்களையும் மிரட்ட தொடங்கியுள்ளது.

  • Last Updated :

செங்கல்பட்டு சேலையூர் பகுதியில் சிக்கன் 65ல்  பீஸ் இல்லை என்று கூறி உணவக உரிமையாளரை தாக்கி தப்பியோடிய கஞ்சா கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

செங்கல்பட்டு  தாம்பரம் அடுத்த சேலையூர் அகரம் செல்லும் பிரதான சாலையில் துரித உணவகம் நடத்தி வருபவர் 40 வயதான ராஜா.  இவரது கடைக்கு திங்கள் மதியம் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்துள்ளது. காரில் வந்து இறங்கிய கும்பல் காரில் நின்றவாரே மது குடித்தபடியும் ,கஞ்சா புகைத்தவாரும் இருந்துள்ளர்.

கடைக்குள் வந்த கும்பல் புரோட்டோ ,சிக்கன் 65 , அவித்த முட்டை என்று தடபுடலாக ஆர்டர் கொடுத்துள்ளனர். முதலில் சிக்கன் 65 வாங்கிய கும்பல் இது தான் சிக்கன் 65யா? எங்க சிக்கனே காணும் என்று கூடுதலாக சிக்கன் பிஸ்களை கேட்டுள்ளனர். அத்துடன் பணியில் இருந்த உணவக ஊழியர்கள் ஓருமையில் பேசி கிண்டல் செய்துள்ளனர்.

இதனால் உணவக ஊழியர்களுக்கும் போதைகும்பலுக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது . ஒருகட்டத்தில் கைகலப்பாக மாற போதை கும்பல் உணவக உரிமையாளரை தாக்கிவிட்டு வாங்கிய உணவிற்கு பணம் கொடுக்காமல் தப்ப முயன்றுள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தப்ப முயன்ற போதை கும்பலை பிடிக்க முயன்றுள்ளனர்.

அப்போதும் விடாத கும்பல் காரில் வைத்திருந்த கத்தி ,அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி பொதுமக்களையும் மிரட்ட தொடங்கியுள்ளது. தட்டிக்கேட்ட ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியையும் பறித்த கும்பல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சேலையூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கினர்.

இதையும் படிக்க: காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரிப்பதை பொறுத்து கொள்ள முடியாது - உயர் நீதிமன்றம்

வாகன பதிவு எண் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 20 வயதான சதீஷ்குமார் அவரது நண்பர்கள் 27 வயதான ரோகித், 32 வயதான அரவிந்த் ,19 வயதான விக்டர் மேலும் ஒரு சிறுவர் உள்பட ஐந்து பேரை பிடித்தனர். விசாரணையில் வழிப்பறி குற்ற பின்னணி கொண்ட இளைஞர்கள் கஞ்சா போதையில் அடாவடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. அவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Crime News, Ganja