முகப்பு /செய்தி /செங்கல்பட்டு / குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர்.. வித்தியாசமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய 'முன்னாள் மதுபிரியர்'

குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர்.. வித்தியாசமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய 'முன்னாள் மதுபிரியர்'

குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர்

குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர்

Chengalpattu News : செங்கல்பட்டில் குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர் அடித்து ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டில் குடிப்பழக்கத்தை கைவிட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி கொண்டாடிய முன்னாள் மதுப் பிரியரின் செயல், கலகலப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு ஆத்தூரிலுள்ள பக்தவத்சலம் நகரில் வசிப்பவர் மனோகரன்(53). இவர் கடந்த 32 வருடங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இதனால் குடிப்பழக்கத்தை கைவிடவேண்டும் என உறுதியுடன் முடிவெடுத்தார். மேலும், கடந்த ஒரு வருடமாக மதுவை தொடுவதில்லை. 2022ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி மது குடிப்பதை கைவிட்டுள்ளார். இந்நிலையில், குடிப்பழக்கத்தை கைவிட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததை நினைவில் வைத்துக்கொண்டு போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி கொண்டாடி வருகிறார். அந்த போஸ்டர் அடிக்க ஒரு உபயதாரரை வேறு தேடிக் கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து மனோகரன் கூறுகையில், 35 வருஷமா குடிச்சிக்கிட்டு இருந்தேன். குடியால நிறைய பாதிக்கப்பட்டேன். குடும்பமே என்னால பாதிக்கப்பட்டது. என் வீடு வாசல வித்து குடிச்சேன். என் பிள்ளைங்க, சொந்தக்காரங்க யாரும் மதிக்கல. போடா குடிக்காரான்னு கடந்து போய்ட்டாங்க. இந்த குடியால எல்லாத்தையும் நாம இழந்துட்டோமேன்னு எனக்குள்ளயே கட்டுப்பாடு கொண்டு வந்துட்டேன். இந்த குடியை நிப்பாட்டனும்னு முடிவு பண்ணி ஒரு வருஷமாக குடிக்காம இருக்கேன்.

யாருக்காவது நல்லது பண்ணனும். இந்த குடியை நிறுத்துனதால யாரும் லாபம். அடுத்தவங்க நம்மை பார்த்து திருந்தனும் அவங்களுக்கு ஒரு மெசேஜ் சொல்லனும் அப்படிங்கிறதுக்காக இந்த போட்ஸ்டர் அடிச்சேன். அடுத்த தலைமுறை மக்கள் குடியால கெட்டுப்போகாம இருக்க குடும்பத்தோட சந்தோஷமா வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.

டாஸ்மாக் கடையில போய் குடிச்சிட்டு தாய், தந்தையை துன்புறுத்துகிறார்கள். உடன்பிறந்தவர்களை துன்புறுத்துகிறார்கள். வேலைக்கு செல்பவர்கள் வேலைக்கு போகாமல் இருக்கிறார்கள். பொதுமக்களை கஷ்டப்படுத்துகிறார்கள். இந்த குடியை நிறுத்துவிட்டால் எல்லாரும் குடும்பத்துடன் ஒற்றுமையாக சந்தோஷமா சுகமா வாழலாம். 10ரூபா சம்பாதிச்சாலும் 2 ரூபாய் நீங்க செலவு பண்ணுனாலும் 8 ரூபாய் வீட்டுக்கு கொடுக்கலாம். வாங்குற சம்பளத்துல குடிச்சிட்டு வீட்டுக்கு போனா அவமானமாக இருக்கும். வீட்டில் பிரச்னை வரும் குடும்பங்கள் கஷ்டப்படும். அதனால் குடியை விட்டுவிட்டு குடும்பத்தோட சந்தோஷமா இருக்கலாம்.

குடிப்பழக்கத்தால் எனது மரியாதையை, ஊரில் மட்டுமின்றி சொந்த வீட்டிலும் இழந்தேன் . ஒரு நாளைக்கு குறைந்தது ரூ.300 முதல் ரூ.400 வரை குடிக்கு செலவிட்டேன். தற்போது குழப்பழக்கத்தை விட்டுவிட்டேன். இதனால் வீட்டிலும், ஊரிலும் மரியாதை கூடியுள்ளது. உடல் நலமும் சீராக உள்ளது. குடியின் சீரழிவுகளை மற்றவருக்கு உணர்த்தவே, சிலர் கிண்டல் செய்தாலும் பரவாயில்லை என போஸ்டர் அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். குடிப்பவர்கள் திருந்தினால் மதுக்கடைகளை அரசாங்கம் தானாக மூடும்” என்று தெரிவித்தார்.

First published:

Tags: Chengalpattu, Local News, Tasmac