ஹோம் /நியூஸ் /Chengalpattu /

எலியை விரட்ட துரத்தி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

எலியை விரட்ட துரத்தி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வீட்டில் ஒரு எலி ஓடுவதை பார்த்ததும் அதனை அடிப்பதற்காக லட்சுமி, வீட்டில் இருந்த கட்டை ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு, எலியை துரத்தினார். எலி வேகமாக ஓடிவிட்டது. அப்பொழுது ,திடீரென மயங்கிய லட்சுமி  இரும்பு கேட்டில் விழுந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் அருகே எலியை அடிப்பதற்காக துரத்தி சென்ற பெண் மங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது-43) இவரது மனைவி லட்சுமி (வயது-36).  செந்தில் சரக்கு வாகன ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார் ,இவர்களுக்கு 12 வயதில்  மகன் உள்ளார். இவர்கள் வசித்துவரும் வீட்டில் எலிகள் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை  வீட்டில் ஒரு எலி ஓடுவதை பார்த்ததும் அதனை அடிப்பதற்காக லட்சுமி, வீட்டில் இருந்த கட்டை ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு, எலியை துரத்தினார். எலி வேகமாக ஓடிவிட்டது. அப்பொழுது ,திடீரென மயங்கிய லட்சுமி  இரும்பு கேட்டில் விழுந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க: தாம்பரம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பெண் தூக்கி வீசப்பட்டு பலி... சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

இது குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் லட்சுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சங்கர் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எலி அடிக்க துரத்திச் சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : சுரேஷ் - ஏர்போர்ட்

First published:

Tags: Death, Woman