செங்கல்பட்டு மாவட்டத்தில் இருளர் தொழில் கூட்டுறவு சங்கம் மூலமாக பாம்பு பிடிப்பு சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் உறுப்பினராக 362 பேர் உள்ளனர். இதில் குறிப்பாக பழைய பெருங்களத்தூர், சென்னேரி, பெருங்களத்தூர், மாம்பாக்கம், காயார், வெம்பேடு என இருளர் பழங்குடியின மக்கள் அந்தந்த வனப்பகுதியில் இருந்து பாம்புகளை பிடித்து வந்து விஷத்தை பாம்பு பண்ணையில் கொடுத்து எடுத்து மீண்டும் பாம்புகளை வனத்துறை மூலமாக அந்தந்த காடுகளில் விழுவது வழக்கமாக செய்து வருகின்றனர். இவர்கள் வாழ்வாதாரம் மேம்பட 40 ஆண்டுகளுக்கு முன் தொழில் கூட்டுறவு சங்கம் மூலமாக இருளர் பாம்பு பிடிப்பு நல தொழில் கூட்டுறவு சங்கம் அமைத்து தமிழ்நாடு அரசுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது.
இதில் உறுப்பினராக இருப்பவர்கள் வடிவேலு மற்றும் மாசி, இவர்களை அடையாளம் கண்ட வெளிநாட்டவர் ரூம்லக்ஸ் விட்டகர் என்பவர் மூலம் பாம்புகளை பிடித்தனர். பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்த வடிவேலு, மாசி ஆகிய இருவரையும் வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று அங்கு கொடிய விஷம் உள்ள பாம்புகளை பிடித்து விஷம் எடுத்து வந்தனர். தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கொடிய விஷமுள்ள பாம்புகளை பிடிப்பதில் இருவரும் கை சேர்ந்தவர்களாக திகழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், இந்திய அரசு இவர்களை கவுரவிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருது வழங்க இவர்களது பெயரை அறிவித்தது. இதன் காரணமாக இருளர் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து வருவதாகவும், இருளர் பழங்குடியின மக்களின் அங்கீகாரம் வழங்கப்பட்டதாகும் இருளர் மக்கள் பெருமிதம் கொண்டனர். இதுகுறித்து மாசி மனைவியிடம் கேட்டபோது, “எங்களுக்கு ரூம்லக்ஸ் விட்டகர் என்பவர் மூலம்தான் அதிக அளவில் பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்று பாம்புகளை பிடித்து வந்தோம். படிப்பறிவில்லாத எங்களுக்கு இதுபோன்ற ஒரு அங்கீகாரம் வழங்கியதற்கு இந்திய அரசுக்கும், இருளர் பழங்குடியின மக்களுக்கும், இருளர் கூட்டுறவு பாம்பு பிடிப்பு நல சங்கத்திற்கும் நன்றி” என்றார்.
மேலும், அவரது மகனிடம் கேட்டபோது சரியான நேரத்தில் ஒரு அங்கீகாரம் வழங்கியதன் மூலம் நாங்கள் இந்த தொழிலை தொடர்ந்து செய்ய எங்களுக்கு ஒரு ஆர்வம் ஊட்டியதாக தெரிவித்தார். தொழில் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குனரிடம் கேட்டபோது 40 ஆண்டுகளாக நாங்கள் பாம்பு பிடித்து எங்களுக்கு என்று எந்த அடையாளமும் இல்லாத நிலையில் தற்போது கிடைத்துள்ள இந்த பத்மஸ்ரீ விருது மூலமாக எங்களுடைய சங்கத்திற்கும் எங்களுடைய இனத்திற்கும் ஒரு அடையாளம் கிடைத்துவிட்டதாக பெருமிதம் கொண்டார்.
செய்தியாளர் : ராபர்ட் எபினேசர் - செங்கல்பட்டு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Local News