முகப்பு /செய்தி /செங்கல்பட்டு / சைவ உணவகத்தில் சிக்கன் ரைஸ் கேட்டதால் சண்டை... சரமாரியாக தாக்கிக்கொண்ட போலீஸ் - ஹோட்டல் ஊழியர்கள்..!

சைவ உணவகத்தில் சிக்கன் ரைஸ் கேட்டதால் சண்டை... சரமாரியாக தாக்கிக்கொண்ட போலீஸ் - ஹோட்டல் ஊழியர்கள்..!

சிக்கன் ரைஸ் கேட்டதால் சண்டை

சிக்கன் ரைஸ் கேட்டதால் சண்டை

அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tambaram, India

தாம்பரம் அருகே சைவ உணவகத்திற்கு சென்று அசைவ உணவு கேட்டு தகராறில் ஈடுபட்ட ஆயுத படை காவலர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பதுவஞ்சேரியில் உள்ள சைவ உணவகத்துக்கு சென்ற தாம்பரம் ஆயுதப்படையை சேர்ந்த காவலர்களான ரவி மற்றும் தமிழ்செல்வம் சிக்கன் ஃபிரைடு ரைஸ் கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு அங்கிருந்த ஊழியர்கள் இது சைவ உணவகம் என பதிலளித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

பின்னர் இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் உணவக பணியாளர்கள் முதலில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

First published:

Tags: Chicken, Fight, Police