ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

மாமல்லபுரத்தில் ராட்சத அலையில் சிக்கி மனைவி கண்முன்னே புதுமாப்பிள்ளை உயிரிழந்த சோகம்

மாமல்லபுரத்தில் ராட்சத அலையில் சிக்கி மனைவி கண்முன்னே புதுமாப்பிள்ளை உயிரிழந்த சோகம்

உயிரிழந்த புதுமாப்பிள்ளை

உயிரிழந்த புதுமாப்பிள்ளை

மாமல்லபுரம் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chengalpattu, India

  காஞ்சிபுரம் எம்.வி.எம்.பி. நகரில் உள்ள சின்ன தெருவை சேர்ந்தவர், பாபு (30). இவருக்கும், அதே  பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி(23) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இரு வீட்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

  இந்த நிலையில் விடுமுறை நாளான  நேற்று புதுமாப்பிள்ளை பாபு தனது மனைவி மற்றும் தன் குடும்பத்தினரை ஒரு வேனில் மாமல்லபுரம் சுற்றுலா அழைத்து வந்தார். புதுமணத்தம்பதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மாமல்லபுரத்தில் உள்ள புலிக்குகை,வெண்ணை உருண்டைபாறை, ஐந்துரதம், அர்ஜுனன்தபசு உள்ளிட்ட அனைத்து புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்த உடன் இறுதியாக மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு சென்றனர்.

  அப்போது புதுமாப்பிள்ளை பாபு தனது குடும்பத்தினர் சிலருடன் மாமல்லபுரம் கடலில் புது மனைவி உடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டதால் கரை ஓரத்தில் குளித்து கொண்டிருந்த பாபுவை ராட்சத அலையில் சிக்கி நடுகடலுக்கு இழுத்து செல்லப்பட்டு மூச்சு திணறி உயிரிழந்தார்.

  இதையும் படிங்க: தீபாவளிக்கு சொந்த ஊர் போகும் பயணிகளுக்காக 16,000 பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் தகவல்

  அப்போது புதுமனைவி ஜெயலட்சுமி அவரது குடும்பத்தினர் கண் முன்னிலையில் அடித்து செல்லப்பட்ட பாபுவை காப்பாற்ற கோரி கதறி கூச்சலிட்டனர் பிறகு உடனடியாக அங்கிருந்த சக சுற்றுலா பயணிகள் போலீசுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

  பிறகு மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று மீனவர்கள் உதவியுடன் கடலில் படகில் சென்று பாபுவின் உடலை தேடினர். ஆனால் நடுகடலுக்கு இழுத்து செல்லப்பட்ட பாபுவின் உடல் வடக்கு திசை நோக்கி காற்றின் வேகத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இரவு நேரத்தில் மாமல்லபுரம் மீனவர் பகுதியில் கரை ஒதுங்கியது.

  இதனையடுத்து  போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி ஒரு மாதத்தில்  மனைவி ஜெயலட்சுமி கண் எதிரில் புதுமாப்பிள்ளை கடலில் ராட்சத அலையில் மூழ்கி இறந்த சம்பவம் மாமல்லபுரம் பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியது.

  செய்தியாளர்: ராபட் எபினேசர் துரைராஜ்

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Chengalpattu, Mamallapuram