ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்து.. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்து.. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

செங்கல்பட்டு அரசு பேருந்து விபத்து

செங்கல்பட்டு அரசு பேருந்து விபத்து

Chengalpattu accident | சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கருங்குழி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து நாமக்கல் நோக்கி 40 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருக்கிறது.

அப்போது கருங்குழி பகுதியில் சென்று கொண்டிருந்த போது  ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களை மதுராந்தகம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு.

First published:

Tags: Accident, Chengalpattu, Local News