ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

வேடந்தாங்கலில் குவியும் 15000க்கும் மேற்பட்ட பறவைகள்.. ரசிக்கும் சுற்றுலா பயணிகள்!

வேடந்தாங்கலில் குவியும் 15000க்கும் மேற்பட்ட பறவைகள்.. ரசிக்கும் சுற்றுலா பயணிகள்!

வேடதங்கல் பறவைகள்

வேடதங்கல் பறவைகள்

vedanthangal birds sanctuary | வேடந்தாங்கல் ஏரியில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் குவிந்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Chengalpattu, India

வேடந்தாங்கல்  ஏரி  நிரம்பியதால், 15 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட அனைத்து இன பறவைகள் குவிந்து வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்  அருகே  உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த ஆண்டு பெய்து வரும் வடகிழக்கு  பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக 16 அடி உயரமுள்ள வேடந்தாங்கல் ஏரி, தற்போது முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது.

வழக்கமாக இந்த நேரங்களில் பாகிஸ்தான், பர்மா, ஸ்ரீலங்கா, சைபீரியா  போன்ற வெளிநாடுகளில் இருந்து வர்ண நாரை, வெளிர் உடல் அரிவாள் மூக்கன், நத்தக்குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழை கடா, கரண்டிவாயன், தட்ட வாயன், பெரிய நீர்க்காகம் உள்ளிட்ட 26 வகையான பறவைகள் வந்து செல்லும்.

தற்போது 15,000க்கும் மேற்பட்ட வகைகளிலான பறவைகள், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்து வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை இனப்பெருக்கத்திற்காக வந்து செல்லும் பறவைகள் காண்பதற்காக வெளிநாட்டினர் வெளி மாநில வெளி மாவட்டங்களில் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

Also see...பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பறவைகள் வரத் தொடங்கியுள்ளது. தற்போது சுமார் 15,000 பறவைகள் வந்துள்ளன.  ஏரி நிரம்பியுள்ளதால் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பறவை ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் ஆர்வமாக சென்று பறவைகளை கண்டு ரசிக்கின்றனர்.

செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு 

First published:

Tags: Birds, Chengalpattu