ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

'வேலைக்கு வரலயா? 4 பேரும் எங்க?' ஸ்பாட்டிலேயே மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்த அமைச்சர்!

'வேலைக்கு வரலயா? 4 பேரும் எங்க?' ஸ்பாட்டிலேயே மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்த அமைச்சர்!

அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆய்வு

அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆய்வு

Maduranthakam | மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் பணிக்கு வராமல் இருந்த 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Maduranthakam, India

மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பணிக்கு வராமல் இருந்த நான்கு  மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் நேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் சில மருத்துவர்கள் இல்லை. அவர்கள் யார் என்று விசாரித்தார் அமைச்சர்.

அதில் மருத்துவமனையில் மொத்தம் 16 மருத்துவர்கள் உள்ளனர். ஆனால் எந்தவித அறிவிப்பு இல்லாமல் பணிக்கு வராமல் இருந்த  மகப்பேறு மருத்துவர் மிர்லின், மயக்கவியல் துறை மருத்துவர் பிரபா வடிவுக்கரசி,  எலும்பு முறிவு மருத்துவர் ஹர்ஷாபாலாஜி,  தொண்டை காது மூக்கு காது சிறப்பு மருத்துவர் கிருத்திகா ,  மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் உள்ளிட்ட 4 மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Also see... ஷாக்கில் காவல்துறை.. காத்திருப்போர் பட்டியலில் தீயணைப்புத்துறை டிஜிபி - திடீர் உத்தரவு!

அத்துடன் மருத்துவமனையை மாத கணக்கில் ஆய்வு மேற்கொள்ளாமல் இருந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் அவர்களை பணியிடமாற்றம் செய்ய வாய்மொழி உத்தரவிட்டுள்ளார் அமைச்சர்.

 செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு

First published:

Tags: Chengalpattu, Doctor, Local News, Ma subramanian