Home /News /chengalpattu /

அண்ணியுடன் கள்ளக்காதல்.. கண்டித்த குடும்பம்.. மதுரையில் மாயமான ஜோடி செங்கல்பட்டில் தற்கொலை

அண்ணியுடன் கள்ளக்காதல்.. கண்டித்த குடும்பம்.. மதுரையில் மாயமான ஜோடி செங்கல்பட்டில் தற்கொலை

செங்கல்பட்டு அருகே அண்ணியுடன் தகாத உறவில் இருந்த இளைஞர், அண்ணனுக்கு தெரிந்ததால், வேப்ப மரத்தில் அண்ணியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chengalpattu | Tamil Nadu
மதுரையை சேர்ந்த இருவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் தகாத உறவின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிலவாட்டம் கிராமத்தில் வயல்வெளி பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் ஆண் மற்றும் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், இவர்கள் மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, பன்னி குண்டு கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி (23) என்றும், மதுரை மாவட்டம், சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி வயது (35) என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் உறவினர்கள் என்றும், கடந்த 4ஆம் தேதி இருவரும் காணாமல் போனவர்கள் என்றும் தெரியவந்தது.

முத்துலட்சுமியின் கணவருக்கு அருள்ஜோதி பெரியப்பா மகன் ஆவார். அருள் ஜோதி சிறிய பையன் என்பதால்  அருகில் இருக்கும் அண்ணன் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். அவ்வாறு அடிக்கடி சென்றதால் அருள்ஜோதிக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த இரு குடும்பத்தாருக்கும் தகவல் தெரிய வர குடும்ப உறுப்பினர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மதுரையிலிருந்து காணாமல் போன நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
Published by:Anupriyam K
First published:

Tags: Chengalpattu, Commit suicide, Illegal affair

அடுத்த செய்தி