ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

திருப்போரூரில் கந்தசஷ்டி பெருவிழா : புருஷா மிருக வாகனத்தில் எழுந்தருளிய முருக பெருமான்..!

திருப்போரூரில் கந்தசஷ்டி பெருவிழா : புருஷா மிருக வாகனத்தில் எழுந்தருளிய முருக பெருமான்..!

முருகன்

முருகன்

திருப்போரூர் முருகர் கோயிலில் கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கந்தசஷ்டி இலட்சார்ச்சனை பெருவிழா நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் திருப்போரூர் முருகன் கோயிலில் மூன்றாம் நாளான நேற்று புருஷா மிருக வாகனத்தில் வந்த முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

  செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள கந்தசாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

  தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெறும் இந்த கந்தசஷ்டி இலட்சார்ச்சனை பெருவிழாவில் 7ம் நாள் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் விழா நடைபெற உள்ளது.

  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

  அதேபோல் கிளி வாகனம், இரண்டாம்நாள் ஆட்டுக்கிடா வாகனம், மூன்றாம் நாளான நேற்று புருஷா மிருக வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

  Also see... தமிழ் ஞானப்பழம் நீயப்பா! பழனி திருக்கோவிலின் தல வரலாறு...!

  முதல்நாள் கஜமுகாசூரன், இரண்டாம்நாள் சிங்கமுகாசூரன் மூன்றாம் நாளான நேற்று பானுகோபுரன் சுவாமியுடன் வலம் வந்தனர்.

  செய்தியாளர்: இசிஆர், வினோத்கண்ணன்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chengalpattu, Kandha Sashti, Murugan temple, Thirupporur