ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

செங்கல்பட்டில் சிறுத்தை நடமாட்டமா? - வீடியோ குறித்து வனத்துறை விளக்கம்!

செங்கல்பட்டில் சிறுத்தை நடமாட்டமா? - வீடியோ குறித்து வனத்துறை விளக்கம்!

சிறுத்தை

சிறுத்தை

Chengalpat District News : செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் பகுதியில்  சிறுத்தை நடமாட்டமா  என பரவிய வீடியோ விவகாரத்தில் வனத்துறை விளக்கமளித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chengalpattu, India

  செங்கல்பட்டு மாவட்டம் தென்மேலப்பாக்கம் பகுதியில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கால்நடைகள் உள்ளது. இதில் இரண்டு வயதுடைய எருமை கன்றுக்குட்டியை கொடிய விலங்கு ஒன்று கடித்து கொன்றுள்ளது.

  மேலும் இந்த பகுதியில், சிறுத்தை புலி, கால்நடைகளை அடித்து, கொன்றதாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

  இதனைத்தொடர்ந்து, விலங்குகள் குறித்து கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டு வனத்துறை கண்காணித்து வருகிறது.

  இதையும் படிங்க : பாழடைந்த வீட்டில் 20 வருடங்களாக வசிக்கும் ஆங்கிலோ-இந்தியன் சகோதரிகள்... சென்னையில் ஓர் மர்மம்?

  இந்நிலையில், இதுவரை எந்த வேட்டை விலங்கு கால் தடங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்படவில்லை என வனத்துறை விளக்கமளித்துள்ளது. எனவே பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக செங்கல்பட்டு வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

  செய்தியாளர் : ராபர்ட் எபினேசர் - செங்கல்பட்டு

  Published by:Karthi K
  First published:

  Tags: Chengalpattu