செங்கல்பட்டு நகர திமுக சார்பில் நடைபெற்ற கலைஞரின் 99 ஆவது பிறந்தநாள் விழாவில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் திமுக அரசைக் கலைக்க பாஜக சதி திட்டம் போடுவதாக குற்றம் சாட்டினார்.
மறைந்த முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் கூட்டத்தில் கே.என்.நேரு பேசுகையில், திமுக அரசைக் கலைக்க பாஜக சதி திட்டம் போடுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சனம் செய்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச். ராஜா, கலைஞரை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்று சொல்கிறார்.
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில், ஆட்சியை எப்படி நடத்துவது, அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருந்த காலத்தில், திறம்பட செயல் பட்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எப்படியாவது ஜாதி கலவரத்தை உண்டு பண்ணி இந்த ஆட்சிக்கு கெட்ட பெயரை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சிறு பிரச்சனையை கூட, பூதாகரமாக மாற்றி கொண்டிருக்கிறது பாஜக. அதிக ஆட்கள் எல்லாம் பாரதிய ஜனதா கட்சியில் இல்லை. அதிமுக சற்று கம்மி இருக்கும் காரணத்தினால், அவர்கள் பெரியதாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
Must Read : சனாதன தர்மத்துக்கு ஆதரவாக ஆளுநர் ரவி பேச்சு.. திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு
பாஜகவால் நம்மை ஒன்றும் வென்றுவிட முடியாது. விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும் என்று கூறினார்.
செய்தியாளர் - ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.