முகப்பு /செய்தி /செங்கல்பட்டு / தினம் ஒரு சைக்கிளில் வேலை: கல்பாக்கம் பகுதிகளில் தொடர்ந்து சைக்கிள் திருடி வந்த இளைஞரை கைது; 18 சைக்கிள்கள் பறிமுதல்

தினம் ஒரு சைக்கிளில் வேலை: கல்பாக்கம் பகுதிகளில் தொடர்ந்து சைக்கிள் திருடி வந்த இளைஞரை கைது; 18 சைக்கிள்கள் பறிமுதல்

திருடிய சைக்கிளை பறிமுதல் செய்த காவல்துறையினர்

திருடிய சைக்கிளை பறிமுதல் செய்த காவல்துறையினர்

Kalpakkam Cycle Theft | வேலைக்கு தினமும் வேறு வேறு சைக்கிளை எடுத்து சென்றபோது அப்பகுதி மக்கள் கூறியதை அடுத்து காவல்துறையிடன் சிக்கிய திருடன்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chengalpattu, India

கல்பாக்கம் பகுதிகளில் தொடர்ந்து சைக்கிள் திருடி வந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் காவல் நிலையத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி சென்ற சைக்கிள் காணவில்லை என தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது புதுப்பட்டிணம் பகுதியில் வசித்து வரும் சையது முஜீப் என்பவரின் மகன் சையது ஹாதிம்(18) என்பவர் தினந்தோறும் வெவ்வோறு சைக்கிள்களில் செல்வதாக பகுதி மக்கள் கூறியதை அடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தியதில்

புதுப்பட்டினம் மற்றும் கல்பாக்கம் நகரிய குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து சுமார் ரூ.50,000 மதிப்பிலான 18 சைக்கிள்கள் பறிமுதல் செய்த போலீசார் சையது ஹாதிமை திருக்கழுக்குன்றம் குற்றவியல் நீதிமன்றத்தில் அவனை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: ராபட் எபினேசர் துரைராஜ்

First published:

Tags: Chengalpattu, Crime News, Local News