Home /News /chengalpattu /

செங்கல்பட்டில் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டில் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு அருகே விபத்தான  அரசு பேருந்து

செங்கல்பட்டு அருகே விபத்தான அரசு பேருந்து

அச்சிறுப்பாக்கம் சுங்கச்சாவடி அருகே அரசு பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

    செங்கல்பட்டு அருகே அரசுப்பேருந்து மீது லாரி மோதிய விபத்தில்  இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்ற அரசுப்பேருந்து  செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு பகுதியில்  லாரி மீது மோதிய கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 6 பயணிகள்  பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி மீது பேருந்து மோதியதில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்தது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    Also Read: பள்ளி மாணவியை வீட்டுக்குள் பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை.. 

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, தீயணைப்புத்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். இந்த கோர விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    செய்தியாளர்: ராபர்ட் வில்சன் , செங்கல்பட்டு
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Bus accident, Road accident, Toll Plaza

    அடுத்த செய்தி