ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

கஞ்சா வியாபாரி வெட்டி படுகொலை - டிவி பார்த்து கொண்டிருந்த போதே கொலை செய்யப்பட்ட கொடூரம்!

கஞ்சா வியாபாரி வெட்டி படுகொலை - டிவி பார்த்து கொண்டிருந்த போதே கொலை செய்யப்பட்ட கொடூரம்!

கொலை செய்யப்பட்டவர்

கொலை செய்யப்பட்டவர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chengalpattu | Tamil Nadu

  செங்கல்பட்டு அருகே கஞ்சா வியாபாரி பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ள , தைலாவரம் பகுதியை சேர்ந்த சந்துரு(28) வினிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் புறநகர் பகுதிகளில்  கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார்.

  இதுபோக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் கொலை மற்றும் கொள்ளை ஆகிய சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் 3  கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

  இந்நிலையில் இன்று வழக்கம் போல மறைமலைநகர் அடுத்துள்ள தைலாபுரம் பகுதியில், தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டே மனைவியுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் திடீரென அவரின் வீட்டிற்குள் புகுந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சந்துருவை தலை, கை முகம் ஆகிய இடங்களில் வெட்டிவிட்டு தப்பி ஓடி உள்ளது.

  ALSO READ | தங்கம் வைரம் புதையல் குவியல்.. 50 - 50 டீல்..! - லட்சங்களை சுருட்டிய கோவில் பூசாரி

  தனது கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி வினிதாவின் கையில் வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பியோடியுள்ளது. கண் எதிரே கணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டு மனைவி துடிதுடித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படுகாயமடைந்த வினிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Cannabis, Chengalpattu, Crime News, Murder