ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

கூடுவாஞ்சேரி அருகே வீட்டில் வெடித்து சிதறிய ஃபிரிட்ஜ்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி...

கூடுவாஞ்சேரி அருகே வீட்டில் வெடித்து சிதறிய ஃபிரிட்ஜ்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி...

ஃபிரிட்ஜ் வெடித்து பலி

ஃபிரிட்ஜ் வெடித்து பலி

Fire Accident | அதிகாலை திடீரென வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறி தீப்பற்றியுள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chengalpattu, India

  செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள கோதண்டராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி கிரிஜா. இவர்களது மகள் பார்கவி(35), இவருக்கும் துபாயில் பணியாற்றிய கிரிஜாவின் தம்பி ராம்குமாருக்கும் திருமணம் நடந்துள்ளது.

  கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் வெங்கட்ராமன் உயிரிழந்தார். வீட்டில் தனியாக இருந்த கிரிஜா துபாயில் உள்ள மகள் வீட்டிற்கே சென்று தங்கியுள்ளார்.

  இந்நிலையில், வெங்கட்ராமனுக்கு ஒராண்டு நினைவு தீதி கொடுப்பதற்காக துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு கிரிஜா அவரது சகோதரி ராதா, சகோதரரும், மருமகனுமான ராம்குமார், மகள் பார்கவி மற்றும் பேத்தி ஆராதனா ஆகியோர் வந்துள்ளனர்.

  10 மாதத்திற்கு மேலாக பூட்டியிருந்த வீட்டில் வியாழன் இரவு 5 பேரும் தங்கியுள்ளனர். கிரிஜா, ராதா தனி அறையிலும், ராம்குமார், பார்கவி மற்றும் ஆராதனா தனி அறையிலும் உறங்கியுள்ளனர்.

  இதையும் படிங்க : விஷகாய்ச்சலால் சுயநினைவை இழந்த கர்ப்பிணி.. தாய் மற்றும் குழந்தையின் உயிரை காத்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

  இதனைத்தொடர்ந்து அதிகாலை திடீரென வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறி தீப்பற்றியுள்ளது. அதிக புகையுடன் அடுத்தடுத்து மின்சார பொருட்களுக்கும் தீ பரவியதால் அதிக அளவில் புகை வெளியேறியுள்ளது.

  வீட்டில் ஒர் அறையில் உறங்கிக்கொண்டிருந்த கிரிஜா மற்றும் ராதா ஆகியோர் புகைவெளியேறியதால் அலறியடித்து சத்தம் போட்டுள்ளனர். புகையால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறிது நேரத்தில் மயங்கியுள்ளனர்.

  சத்தம் கேட்டு வந்த ராம்குமாரும் கரும்புகையால் மயங்கி விழுந்துள்ளார். கூச்சல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்தபோது மூச்சுத்திணறி கிரிஜா, ராதா, ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

  இதையும் படிங்க :காரிலும் ஹெல்மெட் போடணுமா...? கோவில்பட்டியில் உள்ளவருக்கு அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அனுப்பிய குறுச்செய்தியால் அதிர்ச்சி!

  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பார்கவி மற்றும் ஆராதனா ஆகிய இருவரையும் மீட்ட மீட்புப்படையினர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

  மேலும் சம்பவம் நடந்த இடத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டார்.  தீ விபத்திற்கு மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீ விபத்தில் ஒரே குடும்பத்தில் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Chengalpattu, Crime News, Fire accident