Home /News /chengalpattu /

கிளி ஜோதிடர்களை விரட்டி பிடித்து அபராதம் விதித்த வனத்துறையினர்.. கிளிகளையும் விடுவித்தனர்

கிளி ஜோதிடர்களை விரட்டி பிடித்து அபராதம் விதித்த வனத்துறையினர்.. கிளிகளையும் விடுவித்தனர்

பிடிபட்ட கிளி ஜோசியர்கள்

பிடிபட்ட கிளி ஜோசியர்கள்

Mamallapuram : மாமல்லபுரம் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கிளி ஜோசியம் பார்த்து வந்த 7 பேரை விரட்டி பிடித்த வனத்துறையினர் அவர்களுக்கு அபராதம் விதித்தனர். அத்துடன் கிளிகளையும் விடுவித்தனர்.

    வன உயிரின சட்டத்தை மீறி பச்சை கிளிகளை மர கூண்டுகளில் அடைத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளிடம் கிளி ஜோசியத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு அபராதம் விதித்து, திருப்போரூர் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை சாலை, அர்ச்சுணன் தபசு, ஐந்துரதம் மற்றும் கோவளம் கடற்கரை பகுதிகளில் காடுகள், வயல்வெளிகள், தோட்டங்களில் இருந்து பிடித்து வரப்பட்ட பச்சை கிளிகளை பறந்து செல்லாமல் இருக்க இறக்கைகளை வெட்டி மரப்பெட்டி கூண்டுகளில் அடைத்து கிளி ஜோசியக்காரர்கள் துன்புறுத்துவதாக செங்கல்பட்டு மாவட்ட வனத்துறைக்கு புகார்கள் சென்றன.

    இதையடுத்து திருப்போரூர் வனச்சரக அலுவலர் ப.கல்யாண் தலைமையில், வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஒரு வாகனத்தில் வந்து, மாமல்லபுரத்தில் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது கடற்கரை பகுதி, அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரம் அமர்ந்து பச்சை கிளிகளை கூண்டில் அடைத்து சுற்றுலா பயணிகளிடம் கிளி ஜோசியத்தில் ஈடுபட்டு வந்த கிளி ஜோசிக்காரர்களை கண்டுபிடித்தனர்.

    அவர்கள் வனத்துறையினரை பார்த்ததும்  கிளி கூண்டுடன் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து திருப்போரூர் வனத்துறையினர் கைது செய்தனர். பிறகு திருப்போரூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கிளி ஜோசியக்காரர்கள் சுப்பிரமணியன் (வயது 60), தங்கமாரி(50), வள்ளிநாயகம் (29), மாரியப்பன் (43), முப்புடாதி (36), குமார் (40), பரமசிவன் (55) ஆகிய 7 பேர் மீதும் வனத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    Must Read : பள்ளி மாணவியை வீட்டுக்குள் பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய 4 மாணவர்கள் கைது

    தென் மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் மாமல்லபுரத்தில் வீடு வாடகை எடுத்து வசித்து வருகின்றனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. பிறகு கிளி ஜோசியக்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கூண்டு கிளிகளை வனத்துறை அதிகாரிகள் இள்ளலூர் காப்பு காட்டில் கொண்டு போய் விட்டனர்.

    செய்தியாளர் - ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு.
    Published by:Suresh V
    First published:

    Tags: Astrology, Chengalpattu, Forest Department

    அடுத்த செய்தி