செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், திருக்கழுக்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 97 ஏரிகள் மற்றும் யூனியன் கட்டுப்பாட்டில் உள்ள 105 ஏரி குளங்கள் 80 சதவீதம் நிரம்பியுள்ள நிலையில் ஒன்றியத்திற்குட்பட்ட பாலாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலாற்றின் இரு கரைகளையும் தொட்டு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் ஒன்றியத்திற்குட்பட்ட வல்லிபுரம் மற்றும் வாயலூர் தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. எனவே, பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்கவோ, ஆற்றோரம் சென்று ஆற்று வெள்ளப்பெருக்கின்போது செல்போனில் படம் பிடிக்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஆற்றோரம் ஓட்டிச் செல்ல வேண்டாம் என்றும், பாலாற்றை ஒட்டியுள்ள கிராமங்களான மணப்பாக்கம், உதயம் பாக்கம், ஆனூர், வல்லிபுரம், பாண்டூர், பாக்கம், விளாகம், எடையாத்தூர், நெரும்பூர், இரும்புலிச்சேரி, அட்டவட்டம், நல்லாத்தூர், ஆயப்பாக்கம், வாயலூர் ஆகிய கிராம மக்களுக்கு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் வருவாய், துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரவும் வருவாய்த்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர் : ராபர்ட் எபினேசர் - செங்கல்பட்டு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Flood, Heavy rain, Local News