Home /News /chengalpattu /

மாமூல் வாங்குவதில் தகராறு. கஞ்சா போதையில் அரங்கேறிய கொடூர கொலை

மாமூல் வாங்குவதில் தகராறு. கஞ்சா போதையில் அரங்கேறிய கொடூர கொலை

ரவுடியை கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

ரவுடியை கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

Chengalpattu | மாமூல் வாங்குவதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chengalpattu, India
    சென்னை குன்றத்தூர் அடுத்த எருமையூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(25), இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் தனது மகனை காணவில்லை என அவரது பெற்றோர் மறைமலைநகர் போலீசில் கடந்த மே மாதம் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  தமிழ்மணி மற்றும் அவரது நண்பர் மோசஸ் என்பவர்கள் நாங்கள் பிரகாஷ் என்பவனை கொலை செய்து விட்டோம் என பழந்தண்டலம் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தனர்.

    போலீஸ் விசாரணையில் பிரகாஷை அழைத்து சென்று வெட்டி படுகொலை செய்து திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள கிணற்றில் உடலை வீசி விட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து மறைமலை நகர் போலீசார் திருமுடிவாகத்தை சேர்ந்த தமிழ்மணி மற்றும் மோசஸ்சை கைது செய்து விசாரணை செய்தனர்.

    அப்போது திருமுடிவாக்கம் பகுகளில் உள்ள டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் மாமூல் வாங்குவதில் பிரகாசுக்கும், கருப்பு என்கிற தமிழ் அழகன் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கஞ்சா போதைக்கு அடிமையான கருப்பு (எ) தமிழ் அழகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரகாஷை தீர்த்துகட்ட முடிவு செய்து, மறைமலை நகர் பகுதியில் இருந்த பிரகாஷை  தனியே அழைத்து சென்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மண்ணிவாக்கம் பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டி கோணிப்பையில் மூட்டை கட்டி கிணற்றில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது.

    கிணற்றில் வீசப்பட்ட பிரகாஷின் உடலை தாசில்தார் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் கிணற்றில் இருந்த நீரை அப்புறப்படுத்தி விட்டு மீட்டனர். பின்பு பிரகாஷின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

    Also see... தாயை அடிக்கும் குடிகார தந்தை மீது 8 வயது சிறுவன் போலீசில் புகார்

    இது குறித்து வழக்கு பதிவு செய்த மறைமலைநகர் போலீசார் தமிழ் மணி (23) மற்றும் மோசஸ் (20) ஆகியோரை கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய கருப்பு என்கிற தமிழ் அழகு, கட்டிங் சிவா என்கிற சிவா, சூரியா என்கிற சூரியன் ஆகிய மூன்று பேரையும் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chengalpattu, Crime News, Murder

    அடுத்த செய்தி