ஹோம் /நியூஸ் /செங்கல்பட்டு /

செங்கல்பட்டில் தசரா திருவிழா கொண்டாட்டம்.. அலங்காரங்களுடன் ஊர்வலம் வந்த சாமிகள்..

செங்கல்பட்டில் தசரா திருவிழா கொண்டாட்டம்.. அலங்காரங்களுடன் ஊர்வலம் வந்த சாமிகள்..

செங்கல்பட்டடில் தசரா திருவிழா

செங்கல்பட்டடில் தசரா திருவிழா

Chengalpattu | செங்கல்பட்டில் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chengalpattu, India

  நவராத்திரியையொட்டி ஆண்டு தோறும் செங்கல்பட்டில் தசரா திருவிழா நடைபெறுவது வழக்கம். 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் 11 ஆம் நாள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் சின்ன கடைசாமிகள் அலங்காரத்தில் வீற்றிருக்க விழா கமிட்டியினர், கோயில்களில் இருந்து அண்ணா சாலை வழியாக ஊர்வலமாக வந்தனர்.

  பின்னர் அனுமந்த புத்தேரி அண்ணா சாலை முக்கூட்டில் வன்னி மரம் குத்தி வரும் சாமி ஊர்வலம், ஜீவானந்தம் அங்காளம்மன் கோயில், நத்தம் சுந்தர விநாயகர் கோவில், பெரிய நத்தம் ஓசூர் அம்மன் கோயில், மதுரை வீரன் கோயில், நாகாத்தம்மன் கோயில்,   சின்ன அம்மன் கோயில், திரௌபதி அம்மன் கோயில், முத்துமாரியம்மன் கோயில், செல்வ விநாயகர் முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் உள்ள அம்மன் பதினைந்திற்கும் மேற்பட்ட மகிஷாசூரமர்த்தினி , சிவன் பார்வதி என பல்வேறு அலங்காரங்களில் ஊர்வலத்தில் வரிசையாக வலம் வந்தனர்.

  Also see... திருப்பதியில் 8 நாட்களில் 24 லட்சம் லட்டுக்கள் விற்பனை...

  பொதுமக்கள் சாதி மத பேதமின்றி வந்து சாமி தரிசனம் செய்தனர். அத்துடன் திருவிழா கடைகளில் பொருள்கள் வாங்கியும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் விளையாடியும் மகிழ்ச்சி அடைந்தனர்.

  செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chengalpattu, Dussehra celebration, Hindu Temple, Navarathri